Home / Lead News / Post:6413

ஜனாதிபதியின் கூற்றால்  ஹரீனின் உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பைக் கோருகிறது எதிர்க்கட்சி 

Tue, 12 Jan 2021 08:47:39 +0530 | News Desk
ஜனாதிபதியின் கூற்றால்  ஹரீனின் உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பைக் கோருகிறது எதிர்க்கட்சி 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கூற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதான எதிரிக்கட்சியான சஜித் தரப்பு ஹரீனின் பாதுகாப்பை உடன் அதிகரிக்குமாறு பொலிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஹரினின் உயிருக்கு ஜனாதிபதியும் அவரது அரசுமே பொறுப்பு என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

தமது கட்சி ஹரீனின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவருக்கு எமது எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பூரண பாதுகாப்பை வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் கூற்றைத் தொடர்ந்து ஹரீனின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவரின் பாதுகாப்பை பொலிஸார் உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோவும் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் அதில் கேட்டுள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us