ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிராக அம்பாறையில் வைத்து வெளியிட்ட கருத்தால் ஹரீன் அச்சமடைந்துளார்.
இதனால்,அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி அவர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ''நந்தசேன ''என்று குறிப்பிட்டு நாடாளுமன்றில் பேசியிருந்தார் ஹரீன்.
இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி அம்பாறை மக்கள் சந்திப்பின்போது ஹரீனுக்கு எதிராகப் பேசினார்.தனக்கு 2 பக்கங்கள் உள்ளன என்று குறிப்பிட்டு பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தை விவரித்தார்.
இதனால் அச்சமடைந்துள்ள ஹரீன் தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி அவர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.