உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மூவருக்கு எதிராக அமெரிக்கா வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில்,அந்த நாடு இலங்கையிடம் இது தொடர்பில் அவற்றை தகவல்களை கோரினால் ரகசியமாக வழங்க முடியும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில்;
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மூவருக்கு எதிராக அமெரிக்கா வழக்குத் தாக்கல் செய்துள்ளது.இலங்கையிலும் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குவின் அறிக்கை இந்த மாதம் 31ஆம் திகதி எமது கைக்குக் கிடைக்கும்.அதன் பின் வழக்குத் தாக்குதல் செய்து குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.