Home / Lead News / Post:6410

பெண் ஹாதி நீதிபதிகள் நியமனம்: முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம்

Sun, 10 Jan 2021 08:58:16 +0530 | News Desk
பெண் ஹாதி நீதிபதிகள் நியமனம்: முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம்

திருத்தப்படுகின்ற முஸ்லிம் திருமணச் சட்டத்தில் பெண் ஹாதி நீதிபதிகள் உள்ளடக்கப்படவுள்ளனர் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணியாக அல்லது பல்கலைக்கழக பட்டதாரியாக இருப்பதே இதற்கான கல்வித் தகமை என்றும் வயதெல்லை 65 இற்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் பிரேரிக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சின் மேலதிக செயலாளர்-சட்டப்பிரிவு பியுமந்தி பீரிஸ் தெரிவித்து ள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற முஸ்லிம் திருமணச் சட்டத்தின்படி பெண்ணை திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு மணப்பெண்ணின் தந்தையின் சம்மதம் தேவை என்றுள்ளது.அதற்கு மேலதிகமாக மணப்பெண்ணின் சம்மதமும் புதிய திருத்தத்தில் உள்ளடக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

திருமண வயதெல்லை 18 என்ற புதிய திருத்தத்துக்கு மேலதிகமாக மேற்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

நீதி அமைச்சின் இந்தத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் அவை சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.     


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us