அதிகமான பாதாள குழுக்களின் செயற்பாடுகளும் போதைப் பொருள் வர்த்தகமும் சிறையில் இருந்துதான் முன்னெடுக்கப்படுகின்றன என்று எஸ்.பி.திஸாநாயக்க எம்பி நேற்று கூறினார்.
பாதாள குழுத் தலைவர்கள் உயிர் தப்புவதற்காகவே சிறை செல்கிறார்கள் என்று கூறிய அவர் அங்கிருந்துகொண்டு உயிரையும் பாதுகாத்துக்கொண்டு குற்றச் செயல்களையும் முன்னெடுத்து வந்தனர்.இப்போது அந்த நிலை மாறிவிட்டது என்றார்.
எமது ஜனாதிபதி போதை பொருள் வர்த்தகத்தையும் பாதாள குழுக்களையும் முற்றாக ஒழித்து வருகிறார் என்று அவர் மேலும் கூறினார்.