எம்பியாகும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஸ எதிர்காலத்தில் அதற்கான தேவை ஏற்பட்டால் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவரிடம் மீண்டும் ஒரு தடவை கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு கூறினார்.இப்படியே இருந்தவாறு மக்களுக்கு சேவை செய்வது தனக்குப் பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைபற்றி அவரிடம் கேட்டபோது அப்படி எதுவுமில்லை என்று பதிலளித்தார்.
சு.கவை தாம் ஒருபோதும் ஒதுக்கவில்லை என்றும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தவில்லை என்றும் பசில் கூறினார்.