கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில்,மரணித்த ஒருவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று குருநாகலில் இடம்பெற்றது.
கொரோனா பரிசோதனையில் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது;
இதய நோய் காரணமாக குருநாகல் பண்ணல பகுதியைச் சேர்ந்த 76 முதியவர் ஒருவர் 2 ஆம் திகதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.அவர் நேற்று 5 ஆம் திகதி மரணித்தார்.
அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது அவருக்கு PCR மற்றும் அன்டிஜென் ரெபிட் சோதனைகள் செய்யப்பட்டன.
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அன்டிஜென் அறிக்கை கூறியது.இந்த நிலையில்,அவர் நேற்று மரணித்தார்.இதனால்,நேற்றே அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் ஒப்படைக்கப்பட்ட பின்புதான் PCR அறிக்கை வந்தது.அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.இதனால்,அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் சடலத்தை தகனம் செய்ததோடு அந்த மரண வீட்டுக்குச் சென்றிருந்த 180 பேரை தனிமைப்படுத்தினர்..
கொரோனா இல்லை என்று அன்டிஜென் கூறுகிறது. ஆனால்,கொரோனா உள்ளது என்று PCR கூறுகிறது.