கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிறிஸ்தவ அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமைக்காக முன்னாள் எம்பி அலி சாஹிர் மௌலானா பாராட்டுக்களைத் தெரிவிட்டுள்ளார்.
இவர்களின் இந்த ஆதரவு ஜனாஸா தொடர்பான எமது ஜனநாயகரீதியான போராட்டத்துக்கு வலு சேர்க்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் சமூக மற்றும் சமயத்துக்கான மத்திய நிலையம் ஆகிய அமைப்புகள் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதற்காகவே மௌலானா இந்த அமைப்புகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.