Home / Lead News / Post:6400

ஜனாஸா நல்லடக்கம்:ஆதரவாக களமிறங்கியுள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் 

Tue, 05 Jan 2021 10:04:04 +0530 | News Desk
ஜனாஸா நல்லடக்கம்:ஆதரவாக களமிறங்கியுள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் 

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு ஆதரவாக இப்போது கிறிஸ்தவ அமைப்புகளும் களமிறங்கியுள்ளன.

இந்த மக்களின் சமய கிரியைகளுக்கு மதிப்பளித்து உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கிறிஸ்தவ அமைப்புகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் சமூக மற்றும் சமயத்துக்கான மத்திய நிலையம் ஆகிய அமைப்புகளே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பதுகாப்பு நடைமுறையின் கீழ் உடல்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பின் செயலாளர் கொட்பிரேய் யோகராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் நீண்ட காலமாக மௌனம் காத்து வந்த கிறிஸ்தவர்கள் இப்போது மௌனம் களைத்து தங்களின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளதால் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us