முகக் கவசம் அணியாதோரை கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் தீவிரப்படுத்தப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதோடு கட்டாய PCR அல்லது அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.