இலங்கையின் இறக்குமதி சில கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன என்றும் கொழும்பில் அமைந்துள்ளள வேறு மாகாணம் ஒன்றின் ஆளுநர் ஒருவரின் வீட்டிலேயே இவர்கள் தினமும் சந்தித்து இதற்கான திட்டங்களை வகுக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனி,தேங்காய் எண்ணெய்,நிலக்கரி மற்றும் சீமெந்து போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் அனுமதி இவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன என்றும் இந்தக் குழுவில் ஊடாக நிறுவனம் ஒன்றின் சொந்தக்காரர் ஒருவரும் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமாத்திரமன்றி,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை வெளிநாடு ஒன்றுக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலையும் இவர்களே மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிய வருகிறது.
எல்லாக் கலந்துரையாடல்களும் தினமும் இந்த ஆளுநர் இல்லத்திலேயே இடம்பெறுகிறதாம்.இதனால் அதிருப்தியடைந்துள்ள அரசில் உள்ள சிலர் இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதோடு,இந்த டீலிங்கை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனராம்.