Facebook காதலால் 15 வயது மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவம் ஒன்று மஹரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை விடுமுறை காரணமாக ஒன்லைன்மூலம் கல்வி பயில்வதற்காக குறித்த மாணவியின் தந்தை 4 மாதங்களுக்கு முன் மாணவிக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
ஒன்லைனில் படிக்கும் அதே நேரம் Facebook கணக்கொன்றை திறந்து நண்பர்களுடன் அரட்டையடித்து வந்துள்ளார்.அப்படியே ஒரு இளைஞனுடன் காதலும் ஏற்பட்டுள்ளது அந்த மனைவிக்கு.
ஓகஸ்ட் முதலாம் திகதி தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி அந்த காதலனை சந்திக்க காதலனோ மாணவியை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் தங்கியுள்ளான்.
அப்போது அந்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கும் உட்படுத்தியுள்ளான்.இந்த நிலையில்,மகளை காணவில்லை என்று பெற்றோர் பொலிஸில் முறைப்பாடும் செய்தனர்.
மூன்று நாட்கள் கழித்து அவன் மாணவியை அழைத்துக்கொண்டு மாணவியின் வீட்டுக்குச் சென்றதும் மாணவியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால்,அவன் மீண்டும் மாணவியை அழைத்துக்கொண்டு சென்று ஒரு வீட்டில் தங்கினான்.இதனால்.மாணவி கர்ப்பமடைந்தாள்.
காதலன் அவளைக் கொடுமைப்படுத்தியதும் மாணவி பெற்றோரிடம் வந்து விடயத்தைக் கூறினாள்.மாணவியை அழைத்துச் சென்று பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததும் அவன் கைது செய்யப்பட்டு நுகேகொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டான்.அவனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.