Home / Local News / Post:6388

சுயதனிமைப்படுத்தலில் பூனை! பிலியந்தலையில் சம்பவம் 

Fri, 25 Dec 2020 09:48:18 +0530 | News Desk
சுயதனிமைப்படுத்தலில் பூனை! பிலியந்தலையில் சம்பவம் 

தன்னை வளர்த்து வந்த வீட்டார் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதால் அந்த வீட்டின் பூனை ஒன்று மூன்று நாட்களாக உணவு,தண்ணீர் இன்றி வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் இருந்த சம்பவம் ஒன்று பிலியந்தளவில் இடம்பெற்றுள்ளது.

இதை அறிந்த பொலிஸாரும் பொது சுகாதார அதிகாரிகளும் நேற்று முந்தினம் பூனையை வெளியே எடுத்து அதற்க்கு உணவு கொடுத்துள்ளதோடு வேறு பூனை ஒன்றுடன் அதை இணைத்துவிட்டனர்.

அந்த வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.இதனால் அந்தப் பூனை மூன்று நாட்களாக உணவின்றி வாடியது.

அந்த வீட்டார் தமது பூனை இவ்வாறு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்குகின்றமை தொடர்பில் அந்த வீட்டார் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாருக்கு அறிவித்து அவர்களும் பொலிஸாரும் இணைந்து சென்று பூனைக்கு உணவு கொடுத்துள்ளனர்.

வீட்டார் சுகமடைந்து வீட்டுக்கு வரும்வரை இந்த பூனையை பராமரிக்குமாறு அவர்கள் அயலவர்களிடம் கூறிச் சென்றனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us