Home / Local News / Post:6387

குழந்தைங்களின் பசியைப் போக்குவதற்காகத் திருடிய தந்தை

Fri, 25 Dec 2020 09:16:34 +0530 | News Desk
குழந்தைங்களின் பசியைப் போக்குவதற்காகத் திருடிய தந்தை

பட்டினியால் வாடும் தனது பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்காகதந்தை ஒருவர் பணம் திருடிய சம்பவம் ஒன்று கம்பொலவில் இடம்பெற்றுள்ளது.

கூலித் தொழிலாளியான அந்த நபர் கீழே வீழ்ந்து கால் முறிந்துள்ளதால் அந்தக் காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் அவர் தொழிலை இழந்து வீட்டில் உள்ளார்.

வருமானம் எதுவுமில்லை.வீட்டில் வறுமை.அவரது 2 பிள்ளைகளும் பட்டினியில்.அவர்களின் பசியை போக்குவதற்காக கடை ஒன்றில் திருடியுள்ளார்.இறுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையின்போது தான் இவ்வாறு திருடியமைக்கான காரணத்தைக் கூறியுள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us