கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்கிவிடுங்கள் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
இந்த நாட்டு பிரஜைகள் அனைவரும் அவர்களது சமய அடிப்படையில் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு.அந்த உரிமைகள் மறுக்கப்படக்கூடாது.
இன்று கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கும் செய்யும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றமை கவலை தருகின்றது.
அந்த உடல்களை மாலைதீவில் அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படும் செய்தி வேதனைக்குரியது.இந்த நாட்டு மக்களின் உடல்கள் இந்த நாட்டில்தான் அடக்கப்பட வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.முஸ்லிம்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும்.என்றார்.