Home / Gossips / Post:6379

முட்டி மோதிய அமைச்சர்கள் வாசுதேவ-பவித்ரா 

Sun, 20 Dec 2020 18:43:38 +0530 | News Desk
முட்டி மோதிய அமைச்சர்கள் வாசுதேவ-பவித்ரா 

அமைச்சர்கள் பவித்ராவும் வாசுதேவவும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள்.கடந்தவாரம் ஜனாதிபதியின் தலைமையில் வீடியோ மூலமாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர்கள் இருவரும் முட்டி மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இரத்தினபுரி நகரில் ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் அலுவலகம் ஒன்று உள்ளது.அதை  நீர் விநியோக காரியாலயமாக மாற்றுவதற்கு வாசுதேவ நடவடிக்கை எடுத்தபோது அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த விடயத்தை அந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குக் கொண்டு சென்றார் வாசு.

அந்த இடம் ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமானது என்பதால் அதற்கு மின்சாரம் வழங்க முடியாது என்று மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அப்போது அங்கு கூறினார்.

அப்போது குறுக்கிட்ட பவித்ரா அந்த இடத்தில் உள்ள காரியாலயத்தை நான் பாவித்தேன் என்று கூறினார்.

அந்தக் காலப்பகுதியில் அதற்கு மின்சாரம் இருக்கவில்லையா என்று கேட்டார் ஜனாதிபதி.

அதற்கு பதிலளிக்காத பவித்ரா,அந்த இடத்தை இரத்தினபுரியின் அபிவிருத்திக்கு கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.அப்படியே செய்வோம் என்றார்.

இதைக் கேட்ட வாசு ஆத்திரமடைந்து பேயாட்டம் ஆடத் தொடங்கினார்.பவித்ராவும் பதிலுக்கு ஆட்டத்தைத் தொடங்கினார்.

ஏனைய அமைச்சர்கள் இந்தக் கூத்தை சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தை நிறைவு செய்தார்.

நிறைவு செய்த பின்பும் இவர்கள் இருவரின் சண்டை முடிவுக்கு வரவில்லை.தொடர்ந்தது.இதை ஏனைய அமைச்சர்கள் வீடியோ ஊடாக பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us