Home / Sub Lead News / Post:6377

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள்:இறுதியில் தோல்வியடைந்த ஞானசார!

Sun, 20 Dec 2020 12:07:37 +0530 | News Desk
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள்:இறுதியில் தோல்வியடைந்த ஞானசார!

தனது கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்தை எப்படியாவது தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று  போராடிய ஞானசார தேரர் இறுதியில் தோல்வியைத் தழுவியதால் அவர் இப்போது பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கின்றது.

அந்த ஆசனத்தைக் கைப்பற்றுவதற்காக அவருக்கும் அத்துரலிய தேரருக்கும் இடையில் பல மாதங்களாக கடும் போட்டி நிலவியது.

இறுதியில் அத்துரலியவை அந்தக் கட்சி எம்பியாக நியமித்ததால் தோல்வியடைந்து மனமுடைந்து போனார் ஞானசார.

பல வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி அதன் விளைவாகக் கிடைத்த எம்பி பதவி தனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்றும் பல வருட உழைப்பு-இனவாத பிரசாரம் வீணாகிவிட்டதே என்றும் இப்போது புலம்பித் திரிகிறாராம் ஞானசார.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us