கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்களுக்கு உணவு கிடைக்காமல் போகும் என்றும் உலக உணவு நிறுவனம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளது.
இலங்கை உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் கொரோனா காரணமாக சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இதற்கு ஒரு காரணமாகவும் உள்ளது.
இதற்கு மாற்றுத் தீர்வாக உணவு உற்பத்திகளை இலக்கையிலேயே மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
பயிர் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் நிலங்களை உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கும் தூர்ந்து போய்க் கிடக்கும் குளங்களை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.