2017 இல் பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கும் றிசாத் பதியுதீனை கொல்வதற்கும் ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டதாகவும்-அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் அதற்கான பொறுப்பை கருணா அம்மானிடம் ஒப்படைத்ததாகவும்-அதற்காக கருணா 15 கோடி ரூபா கேட்டார் என்றும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சி ஊடகவியலாளர் சமுத்திக்கவுக்கு அவர் வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இந்தத் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் கூறுகையில்;
ஞானசார தேரர்,அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோரை உள்ளடக்கிய எமது மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் பிரபாகரன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளருமான துஷார பீரிஸ் வெளிநாட்டில் இருந்துகொண்டு நாட்டில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தார்.
அதற்கான பொறுப்பை கருணாவிடம் ஒப்படைப்படைப்பதற்கு விரும்பினார்.இது தொடர்பில் தேரர் ஒருவர் கருணாவை சந்தித்து பேசினார்.அதற்கு கருணா சம்மதம் தெரிவித்தார்.
ஒரே நாளில் பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்துவதற்காக 15 கோடி ரூபா கேட்டார் கருணா.அந்தப் பெரும் தொகை தொடர்பான பேரம் பேசல் இழுபறியில் இருந்தது.
துசார பீரிஸ் என்பவர் பிரபாகரன் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.அதை திரையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.அதற்காக இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்தி தனது ஆத்திரத்தை தீர்ப்பதற்கு முடிவு செய்தார்.
இந்தத் தகவல் அனைத்தையும் திரட்டிக்கொண்டுதான் நான் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை சந்திப்பதற்குச் சென்றேன்.
அவரை என்னை அப்போதைய பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவரிடம் இந்தத் தகவலை தெரிவித்தேன்.இது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.
பள்ளிவாசல்கள்மீது மாத்திரமன்றி றிசாத் பதியுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரை கொலை செய்வதற்கும் துசார பீரிஸ் திட்டம் தீட்டி இருந்தார்.
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதே துஸாரவின் திட்டம்.