Home / Lead News / Post:6291

ஏப்ரல் தற்கொலைத் தாக்குதல்: சஹ்ரானை இயக்கியது ஐ.எஸ் இயக்கமா? 

Fri, 16 Oct 2020 07:59:07 +0530 | News Desk
ஏப்ரல் தற்கொலைத் தாக்குதல்: சஹ்ரானை இயக்கியது ஐ.எஸ் இயக்கமா? 

''உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்துவதற்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் நேரடியாகவோ  மறைமுகமாகவோ சஹ்ரானை இயக்கியதா என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.''

-இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று முன் தினம் சாட்சியமளிக்கும்போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்;

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் உரிமை கோரி இருந்தது.இருந்தாலும்,அந்த இயக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சஹ்ரானை இயக்கியதா என்று நான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும்வரை உள்நாட்டு படையினரே வெளிநாட்டுப் படையினரே உறுதிப்படுத்தவில்லை.

இருந்தும் ஸஹ்ரான் குழுவின் செயற்பாடுகள் முற்றாக முடிந்துவிட்டன என்ற முடிவுக்கு எம்மால் வரமுடியாது.என்றார்.

ஸஹ்ரான் குழுவைச் சேராத சில முஸ்லிம் இளைஞர்கள்  ஐ.எஸ் இயக்கத்தின் கொள்கையை பரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்களா என ஆணைக்குழு மைத்திரியிடம் அப்போது கேள்வி எழுப்பியது.

ஆம்.அப்படியான ஒன்றை நான் அறிவேன் என்று பதிலளித்தார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us