Home / Local News / Post:6289

பல் தூரிகைகளுக்கு ஏன் ஹலால் சான்றிதழ்? உலமா சபை விளக்கம்

Fri, 09 Oct 2020 17:58:14 +0530 | News Desk
பல் தூரிகைகளுக்கு ஏன் ஹலால் சான்றிதழ்? உலமா சபை விளக்கம்

பல் தூரிகைகளுக்கு பன்றியின் மயிர்கள் பயன்படுத்தப்படுவதாலேயே நாம் பன்றியின் மயிர்களில் செய்யாத பல் தூரிகைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டியுள்ளது என்று உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்த உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தியிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

பன்றி அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹராம்.அதாவது ,தடை செய்யப்பட்டது.இதன் உறுப்புகள் ஒரு முஸ்லிமின் உடலுக்குச் செல்வது தடை.அவ்வாறே,பன்றி மயிர்களில் தயாரிக்கப்படும் பல் தூரிகை வாயில் படுவது ஹராமாகும் என்றார்.

இருந்தும்,நாம் பல் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கினோமா என்று நினைவில்லை என்றும் ரிஸ்வி முப்தி அங்கு கூறினார்.

 


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us