Home / Lead News / Post:6288

தம்புள்ளை பள்ளியை அகற்ற மீண்டும் சதி: பிரதமரைச் சந்தித்து முறையிட  ஏற்பாடு  

Fri, 09 Oct 2020 10:39:42 +0530 | News Desk
தம்புள்ளை பள்ளியை அகற்ற மீண்டும் சதி: பிரதமரைச் சந்தித்து முறையிட  ஏற்பாடு  

சர்ச்சைக்குரிய தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவதற்கு மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பள்ளிவாசல் தொடர்பான ஆவணங்களை விரைவில் தம்மிடம் கையளிக்குமாறு தம்புள்ளை மாநகர ஆணையாளர் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் வக்பு சபையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.பள்ளிவாசல் நிர்வாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து முறையிடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு எதிரான பிரச்சினை 2012 ஏப்ரல் 20 இல் தொடங்கப்பட்டது.அன்றைய தினம் வெள்ளிக்கிழமை அங்கு ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் கூடி இருந்த மக்கள்மீதும் பள்ளிவாசள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொழுகை நடைபெறாமல் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.பின்னர் பௌத்த தேரர்கள் பள்ளிவாசலுக்குள் புகுந்து பள்ளியை தேசப்படுத்தினர்.

தம்புள்ளை ரங்கிரிய விகாராதிபதியின் தலைமையில் ஊர்வலமாக வந்து இந்த அட்டகாசம் புரியப்பட்டது.இந்தப் பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமிக்குள் அமைந்துள்ளது என்று கூறியே இவர்கள் இதை அகற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த நல்லாட்சியில் இந்தப் பள்ளிவாசலை வேறு ஓர் இடத்தில் அமைப்பதற்கு அப்போதைய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவால் 20 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டது.பிரதேச அரசியல்வாதிகள் அந்தக் காணியை கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us