Home / Lead News / Post:6286

நிகாப் தடையை எதிர்த்த ரணில்:மைத்திரி குற்றச்சாட்டு 

Thu, 08 Oct 2020 06:16:59 +0530 | News Desk
நிகாப் தடையை எதிர்த்த ரணில்:மைத்திரி குற்றச்சாட்டு 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2018 இல் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபைத் தடை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் 5 ஆம் திகதி சாட்சியமளிக்கும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் 2018 இல் பெரும் சர்ச்சையாக மாறியது.பல நாடுகள் அதைத் தடை செய்திருந்தது.இலங்கையிலும் அதைத் தடை செய்வதற்கு ரணில் விரும்பவில்லை.

தடை செய்தால் முஸ்லிம் எம்பிக்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும்.அவர்கள் அரசை விட்டு விலகினால் அரசு ஆட்டங்கண்டுவிடும் என்று ரணில் அஞ்சினார்.

முஸ்லிம் அமைச்சர்களின் ஆதரவு இல்லாமல் அரசைக் கொண்டு நடத்துவது அவர்களுக்குப் பெரும் சிக்கலாக இருந்தது.என்றார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us