Home / Local News / Post:6285

இலங்கையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தொடர்பில் 16 அறிக்கைகள்:மதத் தீவிரவாதம் தொடர்பில் 6 அறிக்கைகள்

Wed, 07 Oct 2020 09:29:50 +0530 | News Desk
இலங்கையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தொடர்பில் 16 அறிக்கைகள்:மதத் தீவிரவாதம் தொடர்பில் 6 அறிக்கைகள்

இலங்கையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் 13 அறிக்கைகளும் மத தீவிரவாதம் தொடர்பில் 6 அறிக்கைகளும் தனக்குக் கிடைத்தன என்று முன்னாள் சட்ட,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளிக்கும்போதே இவாறு கூறினார்.

2016 ஜூலை 20 ஆம் திகதி ஐ.எஸ் தொடர்பில் அரச புலனாய்வு சேவையிடம் இருந்து முதலாவது அறிக்கை கிடைத்தது.அதனைத் தொடர்ந்து மொத்தம் 13 அறிக்கைகள் கிடைத்தன.

.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இலங்கையை சேர்ந்த தஸ்தகீர் அஹமட் என்ற நபர் சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நான் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டேன்.

எனது பதவிக்கு காலத்தில் நாட்டின் சட்ட,ஒழுங்கு தொடர்பில் 407 புலனாய்வு அறிக்கைகள் எனக்கு கிடைத்தன.அந்த அறிக்கைகளுள் 13 ஐ.எஸ் பற்றியவை.6 அறிக்கைகள் மதத் தீவிரவாதம் பற்றியவை.

நாட்டின் பாதுகாப்பு நிலவர அறிக்கைகள் எனக்கு பொலிஸாரால் தினமும் வழங்கப்பட்டன.அவை ஜனாதிபதி,பிரதமர் ,சபாநாயகர் மற்றும் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டன.

அதில் உள்ள சில முக்கியமான விடயங்களை பொலிஸ்மா அதிபருடன் கலந்தாலோசித்தேன்.சில முக்கிய விடயங்களை பிரதமருடன் கலந்தாலோசித்தேன்.
என்றார்.

 


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us