Home / Lead News / Post:6283

தனித் தரப்பாக முஸ்லிம்கள்:புலிகள்பற்றிய தகவலைப் பெறுவது இலகுவானது

Wed, 07 Oct 2020 09:19:47 +0530 | News Desk
தனித் தரப்பாக முஸ்லிம்கள்:புலிகள்பற்றிய தகவலைப் பெறுவது இலகுவானது

வடக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்ததால் முஸ்லிம்கள் தமிழர்களிடம் இருந்து பிரிந்து  தனித்தரப்பாக செயற்பட்டனர்.இது புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை புலனாய்வுத் துறையினர் பெற்றுக்கொள்வது இலகுவானது.

இதனால்,முஸ்லிம்களை தனி இனத்துவ அடையாளத்துடன் தனித் தரப்பாக பிரித்து வைப்பதற்கு எமது புலனாய்வுத் துறை மறைமுகமாக செயற்பட்டது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

புலிகளுடனான போரின்போது உளவுத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு யுக்தியாக புலனாய்வு துறை இதைப் பயன்படுத்தியது என்று மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்து வரும் ஆணைக்குழு முன் நேற்று ஆஜராகி சாட்சியம் வழங்கும்போதே இவ்வாறு கூறினார்.

அப்போது ரணிலிடம் கேள்வியைத் தொடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஐஸா ஜினசேன வட்டுக்கோட்டை பிரகடனம் ஒலுவில் பிரகடனத்துடன் சமமானதா என்று கேட்டார்.இல்லை என்று கூறினார். ரணில்.

அத்தோடு,முஸ்லிம்கள் தனியான இனத்துவ அடையாளம்கொண்ட தரப்பாக அரசியல் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியையும் ரணில் அங்கு விளக்கினார்.

வடக்கில் உள்ள முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் தனியான இனத்துவ அரசியல் அடையாளம் கொண்ட தரப்பாக மாற வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முன்வைத்தார் என்று ரணில் கூறினார்.

முஸ்லிம்கள் இப்படித் தனித்தரப்பாக இருக்க வேண்டிய தேவை எமது புலனாய்வு பிரிவுக்கும் இருந்தது.இவ்வாறு முஸ்லிம்கள் தனித்துவ அடையாளம்கொண்டு செயற்பட்டதால் போரின்போது புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை புலனாய்வு பிரிவால் இலகுவாகப் பெற முடிந்தது.என்று அவர் மேலும் கூறினார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us