Home / Local News / Post:6282

திஸ்ஸ-ரிசாத் கடும் மோதல்:நாடாளுமன்றில் நடந்த கூத்து  

Wed, 07 Oct 2020 07:36:29 +0530 | News Desk
திஸ்ஸ-ரிசாத் கடும் மோதல்:நாடாளுமன்றில் நடந்த கூத்து  

ரிசாத் பதியுதீன் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நாடாளுமன்றில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று முன் தினம் 5 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் தலைமையில் நாடாளுமன்றத் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.அப்போதே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. 

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர் 20 ஆவது தீர்த்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்கும் அதற்குப் பலனாக ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்வதற்கும் மறைமுகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று திஸ்ஸ அத்தநாயக்க ஏற்கனேவே ஒரு நிகழ்வில் கூறி இருந்தார்.

இந்த விவகாரம் மேற்படி நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் எதிரொலித்தது.என்னைப்பற்றியும் எனது கட்சியைப் பற்றியும் விமர்ச்சிக்கும் தகுதி திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு இல்லை என்று ரிசாத் பதியுதீன் அங்கு  கூறினார்.

இதனைத் தொடர்ந்தே அங்கு இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் தெரிவிக்கின்றது. 


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us