Home / Local News / Post:6280

20 ஆவது திருத்தத்துக்கு றிஸாத்தின் ஆதரவு வேண்டாம்: ரியாஜின் விடுதலைபற்றி அரசு ஆராய வேண்டும் 

Wed, 07 Oct 2020 06:10:51 +0530 | News Desk
20 ஆவது திருத்தத்துக்கு றிஸாத்தின் ஆதரவு வேண்டாம்: ரியாஜின் விடுதலைபற்றி அரசு ஆராய வேண்டும் 

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கோ அல்லது வேறு எதற்கோ றிசாத் பதியுதீனின் ஆதரவு தேவை இல்லை என்று அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பின் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

றிசாத் பதியுதீனுடன் எமது அரசுக்கு அரசியல்ரீதியான தொடர்புகள் எவையும் இல்லை.இனியும் தொடர்பு வைக்கமாட்டோம்.

மக்கள் எமக்குத் தந்த ஆணையை நிராகரித்து இவ்வாறானவர்களுடன் தொடர்புகளை பேனமாட்டோம்.20 ஆவது திருத்தச் சட்டத்துக்கோ அல்லது வேறு எதற்கோ றிசாத் பதியுதீனின் ஆதரவு தேவை இல்லை.எம்மிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தாராளமாக உண்டு.

அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரச்சினை உண்டு.இது தொடர்பில் அரசு விசாரணை நடத்த வேண்டும்.என்றார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us