Home / Local News / Post:6279

ரணிலுக்கு சுகமில்லை:விசாரணையின் நடுவில் வீடு திரும்பினார் 

Tue, 06 Oct 2020 13:25:47 +0530 | News Desk
ரணிலுக்கு சுகமில்லை:விசாரணையின் நடுவில் வீடு திரும்பினார் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று ஆஜரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுகவீனம் காரணமாக விசாரணையின் நடுவில் வீடு திரும்பினார்.

ரணிலின் உடல்நிலை சரி இல்லை என்பதால் அவர் சாட்சியமளிப்பதற்கு பிறிதொரு தினத்தை ஒதுக்கித் தருமாறு ரணிலின் சார்பில் ஆணைக்குழு முன் ஆஜரான அவரது சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா அப்போது ஆணைக்குழுவின்  நீதிபதிகள் குழாமிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ஏற்ப விசாரணை இடைநிறுத்தப்பட்டு அதற்காக பிறிதொரு தினம் அவருக்கு வழங்கப்பட்டது.

அதன்படி,இந்த மாதம் 13 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ரணில் மீண்டும் ஆஜராகி சாட்சியமளிப்பார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us