Home / Local News / Post:6278

நாடு முழுவதும் ஊரடங்கு:போலி செய்தி பரப்பியவர்களைத் தேடுகிறது பொலிஸ்!

Tue, 06 Oct 2020 13:02:51 +0530 | News Desk
நாடு முழுவதும் ஊரடங்கு:போலி செய்தி பரப்பியவர்களைத் தேடுகிறது பொலிஸ்!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று  சமூக ஊடகங்களில் போலிச் செய்தியை பரப்பியவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைத் தயாரித்தவர்கள் முதல் சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள்வரை எல்லோரையும் தேடுவதாக அவர் மேலும் கூறினார்.

இது சம்பந்தமாக அவர் சி.ஐ.டியின் பணிப்பாளருடன் பேசியுள்ளார் என்றும் அஜித் ரோஹன கூறினார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us