Home / Local News / Post:6277

சகோதரனின் விடுதலை அரசியலோடு தொடர்புபட்டதல்ல!

Mon, 05 Oct 2020 07:31:23 +0530 | News Desk
சகோதரனின் விடுதலை அரசியலோடு தொடர்புபட்டதல்ல!

எனது சகோதரனின் விடுதலை அரசியலோடு தொடர்புபட்டதல்ல.அவர்மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனது சகோதரர் தொடர்புபட்டார் என்று தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டார்.இப்போது அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடுதலையில் அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்.

நான் பயங்கரவாதத்துக்கு எதிரானவன்.தேர்தலில் வெற்றிபெறுவதற்காக என்மீது  பழிசுமத்தப்பட்டது.இப்போது அது பொய் என்று நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது என்றார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us