Home / Local News / Post:6272

றிசாத்தை அரசுடன் இணைப்பதுபற்றி பேசப்பட்டதா?

Sat, 03 Oct 2020 07:50:58 +0530 | News Desk
றிசாத்தை அரசுடன் இணைப்பதுபற்றி பேசப்பட்டதா?

தான் கலந்துகொண்ட வவுனியா நிகழ்வில் றிசாத் பதியுதீனும் கலந்துகொண்டதை வைத்துக்கொண்டு அவர் அரசில் இணையப்போகிறார் என்று கூறப்படும் செய்தியை அமைச்சர் சமல் ராஜபக்ஸ மறுத்துள்ளார்.

றிசாத் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் அந்த நிகழ்வில் றிசாத்தை அரசுடன் இணைப்பதுபற்றி பேசப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதற்கு போதுமான உறுப்பினர்கள் அரசிடம் இருப்பதால் எவரையும் அரசுடன் இணைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் சொன்னார்.

றிசாத் அரசுடன் இணையவுள்ளார் என்று கூறப்படும் செய்தி தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஸவிடம் வினவியபோதே இவ்வாறு கூறினார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us