Home / Local News / Post:6270

6 பிச்சைக்காரர்கள் கைது:பல லட்சம் ரூபா வங்கி கணக்கில்:கடன் அட்டைகளும் கைகளில்!

Thu, 01 Oct 2020 11:14:31 +0530 | News Desk
6 பிச்சைக்காரர்கள் கைது:பல லட்சம் ரூபா வங்கி கணக்கில்:கடன் அட்டைகளும் கைகளில்!

தமது வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபா பணத்தை சேமிப்பில் வைத்துக்கொண்டு பிச்சை எடுத்துத் திரிந்த 6 பேரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் மூவர் ஆண்கள்.மூவர் பெண்கள்.காலை முதல் மாலை வரை தினமும் இவர்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுகிறார்கள் என்று பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது இவர்களின் வங்கி கணக்கில் பல லட்சம் ரூபா பணம் இருப்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் வங்கிகளின் சிறந்த வாடிக்கையாளர்கள் என்ற பட்டியலிலும் உள்ளனர்.இவர்களிடம் கடன் அட்டைகளும் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்களை ரிதியகம புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us