Home / Local News / Post:6269

இன்று முதல் கையடக்கத் தொலைபேசி வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை! 

Thu, 01 Oct 2020 10:09:01 +0530 | News Desk
இன்று முதல் கையடக்கத் தொலைபேசி வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை! 

இன்று முதல் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்கள் பதிவு செய்யப்பட கையடக்கத் தொலைபேசிகளை  மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாவனையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பதிவு செய்யப்படாத தொலைபேசிகளில் புகுத்தப்படும் சிம் அட்டைகள் இனி இயங்காது என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிதாக கொள்வனவு செய்யப்படும் தொலைபேசியில் காணப்படும் IMEI இலக்கத்தை 1909 என்ற இலக்கத்துக்கு SMS செய்வதன்மூலம் அது பதிவு செய்யப்பட்டதா,இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

முதலாம் திகதிக்கு முன் பாவனையில் இருக்கும் தொலைபேசிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us