Home / Local News / Post:6266

கள்ளக் காதலுக்கு மகள் தடை:காதலன்மூலம் மகளை கொன்ற தாய் 

Wed, 30 Sep 2020 10:29:47 +0530 | News Desk
கள்ளக் காதலுக்கு மகள் தடை:காதலன்மூலம் மகளை கொன்ற தாய் 

தனது கள்ளக் காதலுக்கு தனது 16 வயது மகள் இடையூறாக இருப்பதால் தனது கள்ளக் காதலன் மூலம் தனது மகளை கொலை செய்துள்ளார் ஒரு பெண்.

இந்தச் சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடையில் உள்ள தனது வீட்டில் இருந்து குறித்த மாணவி 22 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.26 ஆம் திகதி இது தொடர்பில் 43 வயது சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

தான் அந்த மாணவியின் தாயாருடன் 8 மாதங்களாக தொடர்பில் இருப்பதாகவும் அவரின் மகள் இந்த உறவுக்குத் தடையாக இருப்பதால் அவரை கொல்லுமாறு அந்தப் பெண்ணே கூறினார் என்றும் சந்தேகநபர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து துணி ஒன்றால் கழுத்தை நெரித்து அந்த மாணவியைக் கொலை செய்ததாக சந்தேகநபர் மேலும் கூறியுள்ளார்.  


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us