திகன கலவரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற உண்மையை தன்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும் என்று முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் வழங்கும்போதே இவ்வாறு கூறினார்.
''இந்தக் கலவரத்தை நடத்தியவர்கள் யார்,மஹாசோன் பலகாயவை உருவாக்கியவர்கள் யார்? அந்த அமைப்பை வழிநடத்தியது என்ற உண்மைகளையும் என்னால் ஆதாரங்களுடன் வெளியிட முடியும்.அதற்கான சந்தர்ப்பத்தை ஆணைக்குழு எனக்கு வழங்க வேண்டும்.''
-என்று பூஜித ஆணைக்குவலுவை கேட்டுக்கொண்டார்.அதற்கான சந்தர்ப்பம் நிச்சயம் வழங்கப்படும் என்று ஆணைக்குழு உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.