உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடரில் சங்கிரிலா ஹோட்டல்மீது தாக்குதல் நடத்திய இல்ஹாமின் மனைவியான பாத்திமா இல்ஹாம் சஹ்ரானின் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கினாராம்.
இது தொடர்பில் விசாரணை நடத்திய சிஐடியின் உதவி பொலிஸ் பரிசோதகர் சிறிமால் சஞ்சீவ உயர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும்போது கூறினார்.
புத்தளத்தில் இயங்கிய சஹ்ரானின் சுஹைரா மதரஸாவில் வைத்தே இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து தெமட்டகொடவில் உள்ள அவரது மஹாவிலே தோட்ட இல்லத்தில் குண்டை வெடிக்கச் செய்து அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.