நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தும்கூட,ஜனாஸா எரிப்பைத் தடுக்க முடியவில்லை என்று முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கொரோனாவால் உயிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன.தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காகாகவே அரசு இப்படிச் செய்கிறது என்று எல்லோரும் எண்ணினர்.
தேர்தல் முடிந்த பின் முஸ்லிம் ஒருவர் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதால் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று எண்ணினர்.ஆனால்,அது பொய்யாகிப் போய்விட்டது.அவர் அரசுக்கு மட்டுமே அமைச்சர் முஸ்லிம்களுக்கு அல்ல என்று உணரவைக்கப்பட்டுள்ளது.
நேற்று உயிரிழந்த கொரோனா நோயாளியான முஸ்லிம் பெண்ணின் ஜனாஸாவை எரிப்பதில் இருந்து அந்த முஸ்லிம் அமைச்சரால் தடுக்க முடியவில்லை என்று முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர்.