அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குப் பெரும் தலையிடியாக இருந்து வருபவர்.வியாழேந்திரன் எம்பி.
தான் பொதுத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தவர் அவர்.அப்படியே வென்றும்விட்டார்.அமைச்சராகுவார் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.
அப்படி நடந்தால் அது முஸ்லிம்களுக்கு மேலும் ஆபத்தாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.அவரது அந்த விவாத செயற்பாடுகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்றால் முஸ்லிம் ஒருவரும் அமைச்சராகவேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதற்குப் பொருத்தமானவர் ஹபீஸ் நஸீர் அஹம்மட்தான் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கருத்து.அதனால் அவர் எப்படியாவது அரசுடன் இணைந்து அமைச்சராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அவரைச் சந்திக்கின்ற ஒவ்வொரு நபரும் இதையே வலியுறுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.இதை அவரும் அவர்சார்ந்த முஸ்லிம் காங்கிரஸும் எவ்வாறு கையாளப்போகிறது என்று முஸ்லிம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.