Video Gallery
சிறுபான்மை கட்சிகளின் கூட்டு சாத்தியப்பட வேண்டும்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொன்று உருவாகவேண்டும் என்ற அவா நம் சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என தேசிய அரசியலில் கால்பதித்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று இன்னும் சில கட்சிகள் நம் சமூகத்திடையே முளைத்திருக்கிறது. சமாதான ஐக்கிய முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன பல உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளன. அத்துடன் நுஆ கட்சியும் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு முஸ்லிம்கள் கட்சி ரீதியாக பல பிரிவுகளை கொண்டிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால்தான் அதிகளவான முஸ்லிம்களின் அரசியல் முதலீடான வாக்குகள் சங்கமித்திருக்கின்றன என்பது உண்மையே. இது ஒருபுறமிருக்க பிரிந்திருக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமென்ற முயற்சிகள் பலதடவைகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. ஆனாலும் அண்மையில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையின்போது மு.கா.வும்,அ.இ.ம.க.வும் கருத்தொற்றுமையுடன் செயற்பட்டமை தேவையானபோது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தமை மன ஆறுதலை தந்தது. அத்தோடு, இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த சமிஞ்ஞைகளையும் காட்டியிருந்தன. இது ஆரோக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்கான அத்திவாரம் இடப்படவில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைகொண்டுள்ள முஸ்லிம் கட்சிகள் தேசிய நலனுக்காக ஒன்றிணைந்து தேசப்பற்றை காட்டியிருந்த சந்தர்ப்பத்தில் அதற்கு ஒருபடி மேலே சென்று சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆரம்பப் புள்ளி முஸ்லிம் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டிருக்கின்றமை ஒரு முன்னுதாரனமான செயற்பாடாக பார்க்கலாம். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஷ்ரபின் காலத்தில் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்றொரு அமைப்பிருந்தது. அதன் தலைமைப் பொறுப்பை அஷ்ரப் ஏற்று முன்னின்று நடத்தியிருந்தார். காலப்போக்கில் அவ்வமைப்பு மறைந்துவிட்டது. இன்று அதே முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை கடந்த வாரம் குருநாகலில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது வலியுறுத்தியிருந்தார். அத்தோடு, ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பையும் விடுத்திருந்தார். சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில்  குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு முடிவுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”அரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்குத தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாகப் பேசவேண்டும். சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்துப் பயணிக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். இந்த உரை பல தரப்பிலும் கைத்தட்டல்களை பெற்றுக்கொண்டது. மறுதினமே இந்த விடயத்தை வரவேற்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ  கணேஷன் அறிக்கை வெளியிட்டிருந்தார். ”சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்தை நண்பர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டுமென்ற கருத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தேர்தல் கூட்டாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் அவ்வந்த கட்சிகளை பொறுத்தவை ஆகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், சிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும் எனவும் மனோ நம்பிக்கை வெளியிட்டிருந்கிறார். உண்மையில் மஹிந்தவுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கும் ஜனநாயத்தை பாதுகாப்பதற்கான ஜனநாயகப் போராட்டத்திலும் முஸ்லிம் தமிழ் தரப்புகள் ஓரணியில் இருந்து செயற்பட்டுள்ளன. இதுதவிர மஹிந்த தரப்பில் இருக்கும் விமல், கம்மன்பில, தினேஷ் உள்ளிட்டோரும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சிங்கள தேசியவாத மற்றும் இனவாத அமைப்புகளும் சிறுபான்மை கூட்டு முயற்சியை சிங்கள மக்கள் மத்தியில் வித்தியாசமான முறையில் கொண்டுபோய் சேர்த்து அதில் சுயலாபமடைய முயற்சிக்கலாம். இது கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஏன் தேசிய கட்சியில் இருக்கும் சில கடும்போக்கு அரசியல்வாதிகளும் இவ்வாறு கடந்த காலங்களில் செயற்பட்டிருக்கின்றனர். வடக்கை சம்பந்தனுக்கும் கிழக்கை ஹக்கீமுக்கும் ரணில் பிரித்துக் கொடுத்துவிடுவார் என்ற பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்தவர்களுக்கு இது பெரிய காரியமல்ல. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டவாறு சிங்கள மக்கள் மத்தியில் சரியானதொரு தெளிவொன்றை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. இதேவேளை, பிரதான தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது. ”நாட்டின் சிறு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 40 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுகுறித்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கலந்தாலோசித்தோம். எனினும், இப்போதுதான் சரியான நேரம் கூடி வந்திருக்கிறது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரக் கட்சியின் தாலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இதன்போது எதிர்கால நமது செயற்பாடுகள் குறித்தும் ஒன்றிணைந்த பயணம் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளில்தான் வெற்றி இருக்கிறது என்று அரசியல் விமர்சகரும் சட்ட வல்லுநருமான வை.எல்.எஸ்.ஹமீட் சுட்டிக்காட்டினார். அத்தோடு, ”சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த செயற்பாடானது வெற்றியளிக்கவேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனாலும் எந்த முன்னேற்றமான முடிவுகளையும் சிறுபான்மையினர் காணவில்லை” என்றார். இலக்கு இல்லாத பயணம் வெற்றியளிப்பதில்லை என்பது யதார்த்தமே. அவ்வாறே குறித்த முயற்சிக்கான இலக்கு என்ன என்பது தெளிவாகக் கூறப்பட வேண்டும். இதை சுட்டிக்காட்டுகிறார் முன்னாள் மு.கா. செயலாளரும் சமாதான ஐக்கிய முன்னணியின் தலைவருமான எம்.ரி.ஹஸனலி, ”சிறுபான்மை சமூகங்களுக்கு வெவ்வேறான பிரச்சினைகள் இருக்கின்றன. அதிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினைகளும் வேறுபடுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் பொது உடன்பாட்டுக்கு வரும் காலம் குறிப்பிடப்பட்ட இலக்குகள் முக்கியமானவை” இலக்குகளோடு பயணித்து சிறுபான்மை மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதே அனைவரதும் அவா…! -Vidivelli
Gossips
சாய்ந்தமருதில் ஆயுள்வேத மருத்துவ முகாம்..!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
சுகாதார அமைச்சின் 26 ஆவது ஆயுள்வேத மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் அமைச்சின் ஆலோசகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறுகிறது. சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இம்மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்ததுடன் சாய்ந்தமருது பி.செ. சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.எஸ்.எம்.சாலிஹ் உட்பட கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். @ Aslam S.Moulana
Local News
உயர்தர மாணவர்கள் பயணித்த வேன் பாரிய பள்ளத்தில் விழுந்து காேர விபத்து : மாணவர்கள் கவலைக்கிடம்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
FRIDAY, 14 DECEMBER 2018  உயர் தர மாணவர்கள் பயணித்த வேன் பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து – பலர் காயம்   எல்ல – வெல்லவாய வீதியில் 24 ஆவது மைல்கல் அருகில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் காதிர்காமத்திற்கு யாத்திரை சென்று மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளை வேன் ரக வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மலை சரிவுகள் கொண்ட இந்த வீதியில் மேல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, வேன் ரக வாகனம் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகி பின்னோக்கி பயணித்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக எல்ல காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவ மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் கவலைக்கிடமான மூன்று பேர் கண்டி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்திற்கு முகம் கொடுத்துள்ளவர்கள் வெலிமடை – அம்பகஸ்துவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பாடசாலைகளின் உயர் தர மாணவர்கள் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. Sooriyan News
Local News
புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கவேண்டும். சகல வேலைகளும் முடிவுறும் தருவாயில், அதிக செலவிலான இத்திட்டத்தை கைவிடமுடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (29) கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;   நீர்ப்பாசன அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒருமித்து செயற்படுவது குறித்து நாங்கள் இணக்கப்பாடுகளை கண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கும், குடிநீர் பாவனையாளர்களும் இடையிலுள்ள பிரச்சினை வட மாகாணத்தில்தான் உச்சத்தில் இருக்கிறது. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டுசெல்வது இப்போது பிரதேசவாத பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.   இப்பிரச்சினைக்கான மாற்றுத்திட்டங்களை நாங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இரணைமடு குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 20 மில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு தயாரகவுள்ளோம். இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் பின்னாலும் யாழ். மக்களுக்கு பதில் சொல்வது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. புரிந்துணர்வு அடிப்படையில்தான் இதற்கு தீர்வுகாணப்பட வேண்டும்.   நீர்க்கட்டணங்களை அதிகரிக்க முடியாமையால், வறட்சி காலங்களில் மாத்திரம் குடிநீரை வழங்குவதற்கு இத்திட்டத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். 250 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின், விநியோக வேலைகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளன. ஆனால், இரணைமடு குளத்திலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினையால் இத்திட்டம் இடைநடுவில் நின்றுகொண்டிருக்கிறது.   அரசியல்வாதிகள் சிலர் இரணைமடு விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், விவசாய மக்கள் மத்தியில் இத்திட்டம் பற்றிய தப்பபிப்பிராயங்களை களையவேண்டும். தண்ணீரை பகிர்ந்துகொள்வதால் விவசாயத்துக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படாது என்பதை அவர்கள் உணரவேண்டும். பாரிய செலவில் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தை இடைநடுவில் கைவிட முடியாது.   இந்த இழுபறியினால் நிதி வழங்கும் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை முடக்கிவிடும் அபாயம் உள்ளது. இருக்கின்ற குறுகிய காலத்துக்குள்ளாவது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு யாழ். மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற குழாய்மூலம் நீர் விநியோகம் 3.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்றார்.   இச்சந்திப்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின், வடபிராந்திய பிரதி பொது முகாமையாளர் ரி. பாரதிதாசன், உதவி பொது முகாமையாளர் கே. வாசுதேவன், மாவட்ட பொறியியலாளர் என். நவரூபன் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரதி பொதுச் செயலாளர் எஸ். சண்முகநாதன், பிரதி முகாமையாளர் என். சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   இதன்பின்னர் அமைச்சர் இரணைமடு குளத்தையும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அனர்த்த நிவாரண செயலணி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் உள்ளிட்ட நீர் மூலங்களை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் இதாே!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
2018ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.   பாட விதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. வர்த்தக பிரிவில் குருணாகல் மலியதேவி வித்தியாலத்தை சேர்ந்த மாணவன் லன்ஸகார ஹேரத் முதியன்சலாகே முதலாம் இடித்தை பிடித்துள்ளார். கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி ரணவீர ஆராச்சிலாகே உச்சித ஆயத்மா ரணவீர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் வீரகோன் முதியன்செலாகே மலிதி ஜயரத்ன மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். கலை பிரிவில் பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் சேனாதி தம்யா டி அல்விஸ் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.   குருணாகல் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி பிட்டிகல மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். உயிரியல் விஞ்ஞான பிரிவில் கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை மாணவி அப்புஹாமிகே கலனி சன்உத ராஜபக்ச முதலாம் இடத்தை பிடித்துள்ளார். கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க பாடசாலை மாணவன் ரவிந்து ஷஷிகத இலங்கமகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.   மாத்தளை சாஹிரா கல்லூரியின் மாணவன் முகமது ரிஸ்மி முகமது ஹக்கீம் கரீன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். பௌதிக விஞ்ஞான பிரிவில் கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சத்துனி ஹன்சனி வசந்த விஜேகுனவர்தன முதலாம் இடத்தை பிடித்துள்ளார். காலி ரிச்சட் கல்லூரியின் மாணவன் சமிந்து சுரான் லியனகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் ஹெட்டிகன்கனகே தெவிந்து ஜனித் விஜேசேகர மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். யாழ்தீபம்.
Local News
மஹிந்தவின் பதவி விலகை உறுதிப்படுத்தினார் நாமல்!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
****************************************  சர்ச்சைக்குரிய பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளைய தினம் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாளையதினம் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் அதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Local News
அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று முதல் ஜனவரி 7வரை விடுமுறை!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
  December 14, 2018   (ப.ப) நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை, இன்று (14)  வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு  புத்தாண்டின் பின்னர் ஜனவரி 7 ஆம் திகதி முதல்  நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். இதனால்தான்,  இலங்கையிலுள்ள உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும் முக்கியான வழக்கின் மனுக்களை விரைவாக விசாரித்து வருவதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையிலுள்ள நீதிமன்றங்களுக்கு, ஒவ்வொரு வருட இறுதியிலும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றமை வழமையாகும்
Local News
மைத்திரி மீதான காெலைச் சதி முயற்சியில் பாேதிய ஆதாரம் இல்லை! : பாென்சேகா மீது மைத்திரி சந்தேகம்!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் விசாரணையாளர்கள் கண்டுபிடிக்கவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது இது தொடர்பில் சிறிசேனவின் பேச்சாளரிடம் கருத்தினை கோரியவேளை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. சில வாரங்களிற்கு முன்னர் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்த விசாரணையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டததன் காரணமாகவே அவரை பதவி விலக்கினேன் என சிறிசேன தெரிவித்திருந்தார் என ரொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பல அரசியல் கொலைகள் இடம்பெற்றுள்ளதால் சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உண்மை என்னவென்பதை கண்டறிவது கடினமாகவுள்ளது என தெரிவித்துள்ள  மேற்குலக இராஜதந்திரியொருவர் பல சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சி குறித்து தெரிவிக்கப்படுவதை சந்தேகத்துடன் நோக்குகின்றனர் என தெரிவித்தார் என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கொலை சதி முயற்சி குறித்த தகவலை வெளியிட்ட நாமல் குமாரவிற்கும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களில் ஆதாரங்கள் உள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார் எனினும் நாமல் குமாரவின் குற்றச்சாட்டுகளிற்கு அப்பால் உறுதியான ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தவேளை ஜனாதிபதி சிறிசேன கொலை சதி முயற்சியின் பின்னால் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாயிருக்கலாம் என தெரிவித்திருந்தார் எனவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க சினைப்பர் என கருதப்படும் நபர் குறித்தும் சிறிசேன தெரிவித்திருந்தார் எனினும் பொன்சேகா குறித்து தற்போது எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காணாமல்போன சினைப்பர் குறித்து தான் எதனையும் அறியவில்லை எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார் வீரகேசரி
Local News
வடக்கிலிருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது! மக்களின் நிலங்களை மட்டும் விடுவிக்க வேண்டும்!!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
வடக்கில் இருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன். ஆனால், இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை மாத்திரம் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரச காணிகளிலோ அல்லது பொதுமக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளிலோ இராணுவம் அதன் படைமுகாமை வைத்திருப்பதற்குத் தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Local News
ரணிலின் புதிய அமைச்சரவை தாெடர்பில் வெளியாகியுள்ள செய்தி
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்குகொண்டுவரப்படும் வகையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதிவியேற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.   19ஆம் திருத்த சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஆறு பேர் உள்ளடங்களாக 30 பேர் கொண்ட அமைச்சரவை திங்கட்கிழமை பதவியேற்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனினும் இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. ஒக்டோபர் 26ஆம் திகதி மைத்திரி - மகிந்தவின் கூட்டணி ஏற்படுத்தப்பட்ட பின்னர் சுதந்திர கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதன்படியே, தற்போது சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஆறு உள்ளடங்கிய 30 பேரை கொண்ட புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைக்க தாம் ஒருபோதும் தயாரில்லையெனவும், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.   எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யாராவது விரும்பினால் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும், அவ்வாறு சேர்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை தமிழ் செய்திகள்
Local News
மன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் தாய்லாந்தின் வெஹேர விகாரைக்குக் குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தாய்லாந்திலுள்ள அனைத்து பெளத்த விகாரைகளுக்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். நாட்டில் அரசியல் குழப்பம் தணிந்த நிலையில், அவசரமாக ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தார். கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மைத்திரி, ஆன்மீக ரீதியாக வழமைக்குத் திருப்ப எதிர்பார்த்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் தனது பொழுதுகளை தாய்லாந்தில் செலவிட்டு வரும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
Local News
ரணில் எதிர்கொள்ள காத்திருக்கும் இன்னொரு பிரச்சினை!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த பிற்பாடு ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சி அமைக்குமாறு கூறினால் இந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பங்காளியாக ஒருநாளும் இருக்க போவதில்லை ஆகையால் 113 என்பது ரணில் அரசாங்கத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆகையால் எந்த சட்டமூலம் வந்தாலும் முடிவுகள் வந்தாலும் இழுபறி நிலை தோன்றும் என்பது தவிர்க்க முடியாதது. எனவே ரணில் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ மைத்திரியின் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரை ஆட்சிக்கு ஆதரவு தர அழைக்க வேண்டும் அல்லது சந்திரிக்கா தலைமையில் உள்ளவர்கள் என பலராலும் அறியப்படும் அவர்கள் அனைவரும் ரணில் அரசாங்கத்துடன் சென்று இணைய வேண்டும். எப்படியோ இந்த பிரச்சினை இன்றுடன் முடிவடைந்த ஒரு பிரச்சினை அல்ல. இது வேறு ஒரு ரூபத்தில் தற்போது வரவுள்ளது போல் தென்படுகிறது. இது எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஜனாதிபதி விலகி முதல் ஜனாதிபதி தேர்தலும் அதன் பின்னர் பொதுத்தேர்தலும் நடைபெற்று நாட்டை ஒரு கட்சி ஆட்சி செய்வதே. MI. IYASDEEN (LLB)
Local News
தலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு பின் பகுதியில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.   இத்தீ விபத்து 30.12.2018 அன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.   தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.   இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Gossips
காத்தான்கடி பொலீசாரின் அதிரடி மேயரை கைது செய்ய முயற்சி,மட்டு நகரில் பதற்றம்!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
மட்டக்களப்பு மாநகரசபை மேயரை கைது செய்து கொண்டு செல்வதற்கு காத்தான்குடி பொலீசார் முயற்சி செய்துள்ளனர். இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட கல்லடி தோனாவிற்கு அருகில் இருந்த மநகரசபைக்கு உட்பட்ட அரச காணியில் மாநகரசபையினரால் எல்லைக்கம்பிகள் நடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் குறித்த இடத்திற்கு வந்த காத்தான்குடி பொலீசார் குறித்த காணி காத்தான்குடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறி தனியார் காணியை மாநகர மேயர் அடைப்பதாக கூறி கைது செய்ய முயற்சித்துள்ளனர். அவர் மறுத்த போது உங்களை உடனடியாக கைது செய்து கொண்டுவருமாறு பொலீஸ் பொறுப்பதிகாரி கூறியதாக கூறி மட்டு மாநகர மேயர் சரவணபவனை கைதுசெய்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். மாநகரசபை முதல்வர் மீது எந்தவித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிசார் தன்னிட்சையாக மேயரை கைதுசெய்து கொண்டு செல்ல முயற்சித்தமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் நீதிபதியின் அனுமதியை பெறவேண்டிய தேவை உள்ள நிலையில் காத்தான்குடி பொலீசார் இவ்வாறு தான்தோன்றிதனமாக நடந்துள்ளமை பொலீஸ் அதிகாரிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேயர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி முகத்துவாரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான ஒதுக்குக் காணியினை சட்டவிரோதமான முறையில் அடாத்தாக தம்வசப்படுத்தும் செயற்பாடொன்று அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களது சட்ட நடவடிக்கையினை தொடர்ந்து அச் செயற்பாடு நிறுத்தப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாநகரசபைக்கு சொந்தமான காணி ஒன்றை தனியார் காணியென அடையாளப்படுத்தி அதற்கான பொய்யான ஆவணங்களை தயார் செய்து குறித்த காணியை காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். கடந்த வருடம் குறித்த காணியை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அடைப்பதற்கு முயற்சி செய்த போது அப்பகுதி இளைஞர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்ட வேலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இன்நிலையில் தற்போது மீண்டும் அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் அரசியல் செல்வாக்கின் நிமிர்த்தம் குறித்த காணியை காத்தான்குடி பொலிசாரை கொண்டு அடைப்பதற்கு குறித்த நபர்கள் முயற்சித்துவருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் தங்கியிருந்த குழுவொன்று குறித்த காணியை அபகரிப்பதற்கான ஆதரவை அமைச்சரிகளிடம் இருந்து பெற்றுவந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேயர் தரப்பு தெரிவித்துள்ளது. மழை காலங்களில் காத்தான்குடி தொடக்கம் கல்லடி வரையான பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை குறைப்பதற்கான ஒருயொரு வடிச்சல் காணியாகவும் புகையிரத மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ஒதுக்குக் காணிக்கே இவ்வாறாக உரிமை கோரி சிலர் அடாத்தாக சொந்தம் கொட்டாடும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Video Gallery
பாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் (பாகம்1)
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 09/11/2018 அன்று வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தை கலைத்தமையை செல்லுபடியற்றதாக்கிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் இங்கு தரப்படுகின்றது. பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பு இது பிரதம நீதியரசர் கௌரவ H N J பெரேரா அவர்களால் மேலும் ஐந்து நீதியரசர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்ட 88 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு. இதன் முக்கிய அம்சங்கள் மாத்திரமே இங்கு தரப்படுகின்றன. இந்த வழக்கின் வாதி தரப்பின் அடிப்படை ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானதும் அரசியலமைப்பை மீறுவதுமாகும். சரத்து 70(1) இன் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் திகதியிலிருந்து 4 1/2 வருடங்கள் முடியும்வரை பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடாது; என வெளிப்படையாகவே தடுக்கப்பட்டிருக்கின்றார். ஒரேயொரு விதிவிலக்கு பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது. ஆனால் அவ்வாறான எந்தவொரு வேண்டுகோளும் இதுவரை விடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் இந்த செயற்பாடு சரத்துக்கள் 17 மற்றும் 126 இல் குறிப்பிடப்பட்ட நிறைவேற்று/ நிர்வாக அதிகார செயற்பாடாகும். வாதி மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட பாராளுமன்றப் பதவிக்காலத்தை முழுமைப்படுத்தும் உரிமை இருக்கிறது. இந்த உரிமை சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியினால் மறுக்கப்பட்டிருக்கின்றது. மட்டுமல்ல, இதனால் அவர்களைத் தெரிவுசெய்த வாக்காளர்களின் உரிமையும் மறுக்கப்பட்டிருக்கின்றது. இச்செயற்பாடு மனுதாரரின் சரத்து 12(1) இல் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை மீறியிருக்கின்றது. அதாவது சட்டத்திற்குமுன் சகலரும் சமம், சகலருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு இருக்கின்றது; என்பது இச்சரத்தாகும். 26/10/18 இலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் புதிய பிரதமருக்கு அரச கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிழையான நோக்கத்தில் செய்யப்பட்டவையாகும். இதன்மூலம் பாராளுமன்றத்தில் செயற்பாடு, பிரதிநிதித்துவ ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பன ஆபத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பிற்கு முரணாக பாராளுமன்ற சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட இந்தத்தாக்குதலில் இருந்து பாராளுமன்றம் பாதுகாக்கப்பட வேண்டும். சரத்துக்கள் 12(1) இற்கு மேலதிகமாக சரத்து 14(1)(a) ( பேச்சு சுதந்திரம்), 14(1)(b) ( அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை). 14(1)(c) ( கூட்டாக செயற்படுவதற்கான சுதந்திரம்), மற்றும் சரத்து 10 (சுயமாக சிந்திப்பதற்கான, மற்றும் மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம்) என்பனவும் மீறப்பட்டிருக்கின்றன. (ஆனாலும் சரத்து 12(1) மீறப்பட்டதன் அடிப்படையிலேயே இவ்வழக்கை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.) பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களின் சுருக்கம் ஜனாதிபதி தனக்கு சரத்துக்கள் 33(2), 66(2), மற்றும் 70(3) ஆகியவற்றால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார். எனவே, சட்டமீறலில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடாத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலின் பின் நாட்டின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்கியது. ஒக்டோபர் 26 முதல் பல சம்பவங்கள் நவம்பர் 14ம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் பொதுத்தேர்தலுக்கு மக்கள்முன் செல்வதற்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். சரத்து 70(3) இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘ பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளபோது எந்த நேரத்திலும்’ என்பதிலுள்ள ‘ எந்த நேரத்திலும் ‘ என்ற சொற்கள் ‘ வீணானவை அல்ல’. பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டும்போது ஏற்படுவதுபோன்று முன்கூட்டியே கலைக்கும்போது வாக்குரிமை மீறப்படுவதில்லை; மாறாக, வாக்குரிமை, சுயநிர்ணய உரிமை போன்றவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியை நீக்குவதற்காக குற்றப்பிரேரணை கொண்டுவரும் பாராளுமன்றத்தின் அதிகாரமும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்திலும் கைவைத்தால் அது மக்களின் இறைமையை கடுமையாகப் பாதிக்கும். ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தீர்மானம் அரசியல் ரீதியானது. அதனை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது. அவ்வாறு ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டால் அவருக்கெதிராக பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவரலாம். 4 1/2 வருடத்திற்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கவே முடியாதென்றால் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது அது பாரதூரமான சூழ்நிலையை உருவாக்கும். உப சரத்து 33(2)( c) 19 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் விசேட சூழ்நிலையில் பாவிப்பதற்காகத்தான். சரத்து 33 இல் ‘ மேலதிகமாக ‘ என்ற சொல் பாவிக்கப்பட்டது சரத்து 70 இல் எது இருந்தாலும் என்பதனால்தான். நாட்டின் இறைமை மக்களிடம் இருப்பதனால் மக்களிடம் அதிகாரம் கேட்டுச் செல்வது அரசியலமைப்பிற்கு முரணாகாது. இவை வாதி, பிரதிவாதிகள் தரப்பு பிரதான அடிப்படை முன்வைப்புகளாகும். அடுத்தபாகத்தில் இவை தொடர்பாக நீதிமன்றத்தின் தொடர்பாக பார்ப்போம். (தொடரும்)
Crime Story
Sat, 24 Oct 2020 14:15:46 +0530
Popular News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us