Local News
இன்று கூடுகிறது நாடாளுமன்றத் தெரிவுக்குழு;ஜனாதிபதியின் எச்சரிக்கை காற்றில்
Tue, 11 Jun 2019 08:06:04 +0530
ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையையும் மீறி இன்று கூடுகிறது தெரிவுக்குழு.   பயங்கரவாதம் தொடர்பில் தகவல் வழங்கிய முஸ்லிம் நபர்கள் உள்ளிட்ட பலர் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு சாட்சியம் வழங்கவுள்ளனர்.தமக்கு எதிராக இதில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதால் இதை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்பதில் ஜனாதிபதி குறியாக இருக்கின்றார்.   அவசர அமைச்சரவைக்கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி இந்தத் தெரிவுக்குழுவை உடனடியாக கலைத்துவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.இதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை.நாடாளுமன்றத்துக்கே உண்டு எனக் கூறி நழுவிவிட்டனர் அமைச்சர்கள்.   இந்த விவகாரத்தை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதும் அவர் இதை நிராகரித்துள்ளார்.நாடாளுமன்ற அதிகாரத்தில் தலையிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று கூறிவிட்டார்.   இருந்தும்,ஜனாதிபதி விடுவதாக இல்லை.நாடாளுமன்றத்தை ஒத்திப்போட்டு இந்தக் தெரிவுக்குழுவை கலைப்பதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இந்தத் தெரிவுக் குழுவை கலைக்காவிட்டால் இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்க முடியாத நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   இருந்தும்,அரசு இதற்கெல்லாம் மசிவதாக இல்லை.இன்று மீண்டும் தெரிவுக்குழுவைக் கூடுகிறது.குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிவதே இந்தக் குழுவின் நோக்கம்.அப்படிப்பட்ட குழுவை ஏன் கலைப்பதற்கு ஜனாதிபதி முயற்சி செய்கிறார் என்ற கேள்வி இப்போது நாட்டு மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.
Local News
இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக  30 ஆயிரம் முஸ்லிம் இளைஞர்கள்!
Tue, 11 Jun 2019 07:47:45 +0530
இலங்கையில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்கள் உடனடியாகப் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கூறியுள்ளார்.   தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கூறுகையில்;   ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோருடன் நல்லுறவைப் பேணி இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க முடியும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.ஆனால்,அவர்களும் அடிப்படைவாதிகள்தான் என்று காட்டிவிட்டனர்.   நாடு பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.ரவூப் ஹக்கீமின் அரசியல் பயணம் இத்தோடு முடிந்துவிட்டது.   மிதப்பு வாக்குகள்போல் இவர்களும் மிதப்புத் தலைவர்கள்.வாய்ப்பு இருக்கின்ற பக்கம் தாவுவார்கள்.இவ்வாறு சிங்கள மிதப்பு அரசியல்வாதிகளும் உள்ளனர்.அவர்கள் அரசியலில் இருந்து விலகி நாற்றுப் பற்றாளர்களுக்கு இடங்கொடுக்க வேண்டும்.   சிங்கள அரசியல்வாதிகளும் தேரர்களும் ஒன்றிணைந்து நிற்போம்.அதேபோல் தமிழர்களும் கிறிஸ்தவர்களும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.எதிர்வரும் தேர்தலில் 75 வீதம் சிங்கள வாக்குகளை பெறலாம்.இதன்மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மிக இலகுவாகத் தோற்கடிக்கலாம்.   இலங்கையில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் உடனடியாகப் புனரமைக்கப்பட வேண்டும்.   மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும்.முஸ்லிம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மத்ரஸாக்களுக்கு அனுப்பக்கூடாது.அவை பயங்கரவாதத்தைப் போதிக்கும் இடங்கள்.அரச பாடசாலைகளுக்கு மாத்திரமே அனுப்ப வேண்டும்.   முஸ்லிம் பெண்கள் அடக்கப்படுகிறார்கள்.அவர்கள் நடனம் ஆட முடியாது.நாடகங்கள் நடிக்க முடியாது.சுன்னத் செய்யப்படுகிறார்கள்.சுன்னத் செய்யப்பட்டதால் காய்ச்சல் வந்து மரணம் அடைந்த சம்பவமும் இலங்கையில் உண்டு.   இவை எல்லாம் நிறுத்தப்பட வேண்டும்.நாங்கள் சிங்களவர்களை முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுப்ப வேண்டும் என்றால் முஸ்லிம்கள் மத்ரஸாக்களை மூடவேண்டும்.   மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் நாட்டுக்கு ஆபத்தானது.அது பயங்கரவாதத்தைப் போதிக்கக்கூடியது.ஒஸாமா பின் லேடனின் திட்டமே ஹிஸ்புல்லாவின் திட்டம்.லேடன் மதரஸாக்களையும் பல்கலைக்கழகங்களையும்தான் அமைத்தார்.அவற்றின் ஊடாக பயங்கரவாதத்தைப் போதித்தார்.-என்றார்.    
Local News
எனது பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க முடியாது 
Tue, 11 Jun 2019 00:15:26 +0530
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்னுடையது.தனியார் பல்கலைக்கழகம்.நான் கடன் வாங்கி நிர்மாணிக்கின்றேன்.இதை அரசுடமையாக்க முடியாது என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சுவர்ணவாஹினிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின்போது கூறியினார்.அவர் மேலும் கூறுகையில்;   மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இஸ்லாமிய கல்வியைப் போதிப்பதற்கோ அல்லது ஷரியாவைப் போதிப்பதற்கோ நிர்மாணிக்கப்படவில்லை.ஏனைய தனியார் பல்கலைக்கழகம் போன்று இது தொழில் கல்வியை போதிக்கும் இடமாகும்.   இனவாதிகள் இதன்மீது குறி வைத்துள்ளனர்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதை மூடிவிடுவதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றனர்.இதை மூடிவிட வேண்டும் அல்லது அரசுடமையாக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.தனியாருக்குச் சொந்தமான இதை அரசுடமையாக்க முடியாது.   நான் கடன் வாங்கி நிர்மாணித்து வருகின்றேன்.இது எனது குடும்பச் சொத்து.இதில் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் கல்வி கற்கப்போவதில்லை.எல்லா இனங்களை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்க முடியும்.-என்றார்.
Local News
ஸஹ்ரானை இயக்கியது வெளிநாட்டு சக்திகள்; நாட்டின் தலைவருக்கும் இது தெரியும்
Mon, 10 Jun 2019 09:50:34 +0530
''ஸஹ்ரான் குழு உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக நான் நம்பவில்லை.வெளி நாட்டுச் சக்திகள் யாரோ கொடுத்த ஒப்பந்தத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.பத்து,பதினைந்து வருடங்களின் பின் நாடு தலை தூக்க முடியாதவாறு ஒவ்வொரு முறையும் இந்த ஒப்பந்தம் இருக்கும்.எங்களுக்கு இது தெரியும்.ஏனைய கட்சித் தலைவருக்கும் நாட்டின் தலைவருக்கும் இது தெரியும்.''   இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சியின் 'ஹார்ட் டோக்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அதன் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.    கேள்வி:ரவி கருநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக பதவி விலகாத நீங்கள் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான பிரேரணையின்போது மாத்திரம் பதவி விலகியது ஏன்?   பதில்: ரவி பிரேரணை வந்ததும் பதவி விலகிவிட்டார்.ரிசாத் விலகவில்லை.ஒருபுறம் ஞானசார தேரர் பகல் 12 மணிக்குள் அமைச்சர்கள் பதவி விலகாவிட்டால் நாடுபூராகவும் திருவிழா நடக்கும் என்றார்.   அது முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருத்து.அந்தக் கூற்றோடு கறுப்புக் கொடிகள் ஏந்தப்பட்டு ஒரு வகையான பதட்டம் ஒன்று ஏற்பட்டது.அத்தோடு எல்லோரும் விலகுதல் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.   கேள்வி: இனத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் விலகும்போது இனவாதத்தோடு செயற்பட வேண்டாம் என்று நீங்கள் அடுத்தவரைப் பார்த்து எப்படிச் சொல்வீர்கள்?   பதில்:மீண்டும் முஸ்லிம் இளைஞர்கள்  அடிப்படைவாதத்தின் பக்கம் செல்வதை நாங்கள் இதன்மூலம் தடுத்துள்ளோம்.   கேள்வி:இந்த ஒற்றுமை சிங்கள அமைச்சர்களுக்கு ஒரு முன்னுதாரணம் அல்லவா?   பதில்:அவர்கள் இந்தமாதிரி ஆபத்துக்குள் சிக்கவில்லையே.ஸஹ்ரான் குழு உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக நான் நம்பவில்லை.வெளி நாட்டுச் சக்திகள் யாரோ கொடுத்த ஒப்பந்தத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.பத்து,பதினைந்து வருடங்களின் பின் நாடு தலை தூக்க முடியாதவாறு ஒவ்வொரு முறையும் இந்த ஒப்பந்தம் இருக்கும்.எங்களுக்கு இது தெரியும்.ஏனைய கட்சித் தலைவருக்கும் நாட்டின் தலைவருக்கும் இது தெரியும்.   கேள்வி:விமல் வீரனஸ கூறி இருந்தார் இது அமெரிக்காதான் இதைச் செய்தது என்று.?   பதில்:உண்மை.அவர் மட்டும்தான் சரியாகச் சொல்லி இருக்கின்றார்.அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அழகாகத் தேடிப்பிடித்து உரிய இடத்தில் உரிய நேரத்தில் ஆணி அடித்துள்ளார்.   ஆனால்,அவர்போல்,என்னால் பேச முடியாது.இது மிகவும் ஆபத்தானது.எனது மக்களை நான் ஆபத்தில் தள்ளமாட்டேன்.   கேள்வி:புர்காவை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றில் சட்டமூலம் கொண்டுவந்தால் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா?   பதில்:ஏனைய மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அது இருந்தால் நாம் மாற்றம் ஒன்றை நாடவேண்டும்.அதை நாங்கள் சுயமாகவே செய்ய வேண்டும்.அத்தோடு,இது பௌத்த நாடு என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.   கேள்வி : அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியபோதும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய வளங்களை பாரம் கொடுக்கவில்லையே?   பதில்:வாகனங்களை பாரம் கொடுத்துவிட்டேன்.எனக்கு வீடு இல்லாததால் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருக்கின்றேன்.அதையும் கேட்டால் கொடுப்பேன்.   கேள்வி: முஸ்லிம்கள் எல்லோரும் இந்தச் சந்தர்ப்பத்தில் பதவி விலகிய நிலையில் முஸம்மில் ஆளுநர் பதவியை பாரமெடுத்துள்ளாரே.அவர் முஸ்லிம் இல்லையா?   பதில்: இந்தச் சந்தர்ப்பத்தில் அதைத் தவிர்த்து இருக்கலாம்.ஒருவேளை இன நல்லிணக்கம் என்ற அடிப்படையில் அந்தப் பதவியை ஏற்றிருக்கலாம்.பரவாயில்லை. [Lanka Watch]
Local News
சர்வதேச இராணுவம் இலங்கைக்குள் நுழையுமா?
Sat, 08 Jun 2019 20:54:38 +0530
இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச உதவி தேவையே தவிர சர்வதேச இராணுவம் அல்ல. சர்வதேச இராணுவம் ஒருபோதும் இலங்கைக்குள் நுழையாது என்று அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறினார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்; இலங்கையில் அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு புதிய சட்டம் ஒன்று தேவைப்படுகின்றது.இருக்கின்ற சட்டம் போதாது.இந்தப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச இராணுவம் வரவுள்ளது என்று கூறுகின்றனர்.அப்படி எதுவும் நடக்காது. இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச உதவி தேவையே தவிர சர்வதேச இராணுவம் அல்ல. சர்வதேச இராணுவம் ஒருபோதும் இலங்கைக்குள் நுழையாது.இலங்கையின் இறைமையை விட்டுக் கொடுத்து பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டிய தேவை எமக்கில்லை.-என்றார்.
Local News
உளவுத்தகவல் வழங்கிய முஸ்லிம்களுக்கு அழைப்பு
Sat, 08 Jun 2019 18:58:50 +0530
சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேரும் முஸ்லிம் அமைப்புகளும்  ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.   தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.இதன்போது, உளவுத் தகவல்களை வழங்கியவர்களிடம் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எந்த காலப்பகுதியில் தகவல்கள் வழங்கப்பட்டன, அது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பன குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
World News
இறைச்சி சாப்பிட்டார்களாம்;முஸ்லிம்கள்மீது தாக்குதல் 
Sat, 08 Jun 2019 17:52:29 +0530
உத்தர பிரதேஷ் பெஹாரி எனும் இடத்தில் இறைச்சி உண்டார்கள் என்று குற்றம் சுமத்தி நான்கு முஸ்லிம் தொழிலாளர்கள்மீது காடையர் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.   மேசன் தொழிலாளிகளான இவர்கள் வேலை செய்யுமிடத்தில் இந்துக் கோவிலுக்கு அருகில் பகல் உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது அந்த இடத்துக்கு வந்த காடையர்கள் கோவிலுக்கு அருகில் இறைச்சி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் என்று கூறி இவர்கள்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.   ஆனால்,இவர்கள் இறைச்சி உண்ணவில்லை என்றும் மரக்கறிதான் உண்டனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.இது இவர்கள்மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கக்கூடும் என்று பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.   இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். காடையர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி முஸ்லிம்கள்மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
Local News
கபீர் ஹாசிமுக்கு கேகாலை சிங்களவர்கள்  பாடம் புகட்டுவர் 
Fri, 07 Jun 2019 22:31:38 +0530
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது அமைச்சுப் பதவியைத் துறந்த கபீர் ஹாஷிமுக்கு கேகாலை மாவட்ட சிங்கள மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்று அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அசாத் சாலி,ரிசாத் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரைப் பதவி விலகுமாறு கோரியே நான் உண்ணா விரதம் இருந்தேன்.ஆனால்,எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். கபீர் ஹாசிம் கேகாலை மாவட்ட சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்.அவரும் இந்தப் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகியுள்ளார்.எதிர்வரும் தேர்தலில் சிங்கள மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்டுவர்.-என்றார்.
Local News
ஆறு மாதங்களுக்குள் ஆட்சியை  கவிழ்க்கமாட்டோம்
Fri, 07 Jun 2019 17:53:20 +0530
நாட்டில் தற்போது தலை தூக்கி இருக்கும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஆறு மாதங்களுக்குள் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கமாட்டோம் என்று மஹிந்த தரப்பு எம்பி இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.   நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் மஹிந்த அணி எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி நாம் அவரிடம் வினவியபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;   புலிகள் ஒழிக்கப்பட்டு 10 வருடங்கள் நாம் நிம்மதியாக இருந்தோம்.10 வருடங்கள் கழித்து வேறு ஒரு பயங்கரவாதம் எமது நாட்டுக்குள் நுழைந்துள்ளது.இந்தப் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.   இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் அரசியல் இலாபம் அடையும் முயற்சியில் ஈடுபடமாட்டோம்.நாட்டின் பாதுகாப்பை முற்றாக உறுதிப்படுத்துவதற்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.   நாட்டில் தற்போது தலை தூக்கி இருக்கும் இந்தப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஆறு மாதங்களுக்கு இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கமாட்டோம்.-என்றார்.  
Local News
புலிகளின் ஊடாகச் செய்ய முடியாததை ஐ.எஸ் ஊடாகச் செய்கிறது அமெரிக்கா
Fri, 07 Jun 2019 00:27:05 +0530
அமேரிக்கா இலங்கையில் புலிகளின் ஊடாக எதைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்ததோ அதை இப்போது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஊடாகச் செய்கிறது என்று விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; ஐ.எஸ் என்பது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.தான் தெரிவு செய்யும் நாடுகளில் தான் விரும்பியதைச் சாதித்துக்கொள்வதற்காகவும் சீனாமீது தாக்குதல் நடத்துவதற்காகவுமே இந்த அமைப்பை அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது. ஐ.எஸ் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 60 வீதமான தாக்குதல்கள் சீனாவின் சொத்துக்கள்மீதே நடத்தப்பட்டுள்ளன.அந்தத் தாக்குதல்கள் காரணமாக 50 வீதமான வேலைத் திட்டங்களில் இருந்து சீனா வெளியேறியுள்ளது. இந்த உண்மை தெரியாது சில முட்டாள்தனமான முஸ்லிம் இளைஞர்கள் இந்த அமைப்புடன் இணைந்துள்ளனர். புலிகளை வைத்து தமது தேவைகளை இலங்கையில் நிறைவேற்றிக்கொள்வதற்கு அமெரிக்கா அப்போது நடவடிக்கை எடுத்தது.எம்மால் புலிகள் அழிக்கப்பட்டதால் அது நிறைவேறவில்லை.இதனால் ஐ.எஸ் அமைப்பின் ஊடாக இதைச் செய்வதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையைக் கைப்பற்றுவதுதான் அமெரிக்காவின் ஒரே தேவை.இல்லையென்றால் ஐ.எஸிற்கு இலங்கைமீது தாக்குதல் நடத்திய தேவை என்ன இருக்கின்றது?          
Local News
பயங்கரவாதிகளை பாதுகாக்கும் செயலே இந்த இராஜினாமா
Fri, 07 Jun 2019 00:04:26 +0530
பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளனர் என்று மஹிந்த தரப்பு எம்பி அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; ரிசாத் மீதுதான் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.ஏனைய முஸ்லீம் அமைச்சர்கள்மீது அல்ல.ஆனால்,அணைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.இது பயங்கரவாதிகளை பாதுகாக்கும் செயலாளாகும். தம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டால் அவர்களை பாதுகாப்போம் என்ற செய்தியை இவர்கள் இதன்மூலம் தெரிவித்துள்ளனர். ரிசாத்துக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு உண்டா,இல்லையா என்று எனக்குத் தெரியாது.ஆனால்,அவர் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது மட்டும் உறுதியாகத் தெரியும்.
Local News
காத்தான்குடியைச் சிதைக்கும் சதியில் ஹிரு
Thu, 06 Jun 2019 23:42:09 +0530
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இனவாத செய்திகளை வெளியிட்டு வரும் ஹிரு தொலைக்காட்சி இப்போது காத்தான்குடியைக் குறி வைத்து சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள வீதிப் பலகைகள்,கட்டடங்கள் மற்றும் வீதி அலங்காரங்கள் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ள அரபு எழுத்துக்களை படம் படித்து அதை ஒளிபரப்பி வருகின்றது. அரபு நாடுகளில் இருக்கின்ற அதே அமைப்பில் இவை இருக்கின்றன என்று கூறி காத்தான்குடி அரபு நாடாக மாராப் போகின்றது என்று மறைமுகமாக கூறாத் தொடங்கியுள்ளது. அதேபோல்,கிழக்கில் ஏனைய இடங்களிலும் காணப்படும் அரபு எழுத்துக்களையும் படம் பிடித்து கிழக்கு அரபு நாடாக மாரப் போகின்றது என்று  சிங்கள மக்கள் மத்தியில் பீதியையும் இனவாதத்தையும் பரப்பி வருகின்றது.  
Crime Story
ஒரு பெண்ணுக்காக 9 பேர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம்கள்
Wed, 27 May 2020 06:01:37 +0530
ஒரு பெண்ணுக்காக 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.அவர்களுள் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இருவர் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் கோணிப்பை தயாரிக்கும் தொழில்சாலை ஒன்று உள்ளது.இதன் ஓனர் சந்தோஷ் என்பவர்.இந்தத் தொழிற்சாலையில் மேற்குவங்கம், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்துவந்தனர். அவர்களில் ஒருவர்தான் மசூத்.மேற்குவங்கத்தை சேர்ந்தவர்.கரிமாபாத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தார். இந்த சமயத்தில் லொக்டவுன் போடப்பட்டதால் தொழில்சாலை மூடப்பட்டது.அதனால் குடியிருந்த வீட்டுக்கு வாடகை தர முடியாமல் போய்விட்டது.அதனால் உரிமையாளர் சந்தோஷ் அந்தக் குடும்பத்தை தன்னுடைய குடோனிலேயே தங்க வைத்துக் கொண்டார். இந்தச் சமயத்தில்தான் அந்த குடும்பத்தையே திடீரென காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்தார் சந்தோஷ். பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போதுதான், தொழில்சாலைக்குப் பக்கத்திலேயே ஒரு கிணற்றில் சடலங்கள் மிதப்பதாகத் தகவல் வந்தது.தண்ணீரில் மிதந்தபடி 4 சடலங்களை கிடந்தன.மசூத், அவரது மனைவி நிஷா,கணவரைப் பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா,அவரது 3 வயது மகன் ஆகியோரின் சடலங்கள்தான் அவை. ஆனால் சடலங்களை மீட்ட மறுநாளே அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அதே கிணற்றில் மேலும் 5 சடலங்கள் மிதப்பதாகத் தகவல் வரவும் மீண்டும் சென்று மீட்பு பணியைத் தொடங்கினர். அப்போது மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். இப்படி ஒரே கிணற்றில் அடுத்தடுத்து 9 சடலங்கள் மிதந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து.இவர்கள் எதனால் இறந்தார்கள்? வறுமையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலையா என்ற பரபப்பு விசாரணையும் ஆரம்பமானது.  ஆனால் சடலங்களை மீட்ட உடனேயே அது தற்கொலை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பொலிஸார்.. காரணம் அந்த பாழுங்கிணற்றில் மூழ்கி சாகும் அளவுக்கு தண்ணீர் இல்லை என்பதால். அதனால் கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.இவர்கள் சடலமாக மிதந்த முதல்நாள்தான், மசூத்தின் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது தெரியவந்தது.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரை சேர்ந்தவரும் வந்திருக்கிறார்..ஆனால் சடலங்கள் மிதந்த அன்று அவரை அந்த ஊரில் காணோம். எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இறுதியில் அவரை கைதும் செய்தனர்.அப்போதுதான் சஞ்சய் குமார் ஷா உட்பட 4 பேர் சேர்ந்து இந்த 9 பேரையும் கொன்றது தெரியவந்தது.காரணம் மசூத் மகள் புஸ்ராதான்..  கணவனை பிரிந்து வாழும் இந்தப் பெண்ணுக்கு வயது 22 ஆகிறது.புஸ்ராவுக்கும் சஞ்சய்க்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.ஆனால் மசூத் மகளை கண்டிக்கவும், சஞ்சய்யுடனான தொடர்பை புஸ்ரா கைவிட்டுவிட்டார். இந்தக் கோபத்தினால்தான் மசூத் குடும்பத்தையே மொத்தமாக காலி செய்ய சஞ்சய் துடித்தார்.அதற்காக நண்பர்கள் 4 பேரை தயார் செய்தார்.பக்காவாக பிளான் செய்தார். அந்த சமயத்தில்தான் புஸ்ரா மகனுக்கு பர்த்டே வந்தது.பிறந்த நாள் நிகழ்ச்சியில்,குழந்தைக்கு வாழ்த்து சொல்ல வந்தவர்கள், சர்க்கரை பொங்கல் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.அங்கிருந்த குளிர்பானத்தில் விஷத்தை கலந்து 9 பேருக்கும் கொடுத்தனர். மொத்தக் குடும்பமே அதைக் குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளது.இதன்பிறகுதான் அவர்களை தூக்கி கொண்டு போய் பக்கத்தில் உள்ள பாழுங்கிணற்றில் ராத்திரியோடு ராத்திரியாக தூக்கி போட்டு வந்துள்ளனர். இப்போது 4 பேருமே தற்போது கைதாகி உள்ளனர்.பீகாரை சேர்நத் ராம் குமார்,ஷியாம் குமார் ஆகியோர் மசூத்துடன் நெருக்கமாக இருப்பது சஞ்சய்க்கு பிடிக்காததால்,அவர்களையும் சேர்த்து கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எத்தனையோ இன்னல்களில் பசியும், பட்டினியுமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்து வரும் நிலையில், இப்படி ஒரே குடும்பத்தில் அப்பாவி குடும்பம் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Popular News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us