Local News
முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பாக்கும் எம்பிக்களின்  எண்ணிக்கை எத்தனை தெரியுமா?
Mon, 27 Jul 2020 23:39:52 +0530
இந்தத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் ஆகக் குறைந்தது 10 எம்பிக்களை எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கடந்த முறை மொத்தமாக முஸ்லிம் எம்பிக்கள் 21 பேர் இருந்தனர் என்றும் அதே எண்ணிகையிலான எம்பிக்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 10 வீதமாக இருப்பதால் 22 எம்பிக்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று கூறிய ஹக்கீம் 21 கிடைப்பது நியாயமானது என்று சொன்னார்.
Local News
பஷீர் சேகுதாவூத் பெறப் போகும் வாக்குகள் எத்தனை தெரியுமா?
Mon, 27 Jul 2020 11:31:30 +0530
இந்தப் பொதுத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தலைவர் பஷீர் சேகுதாவூத் 26 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகுவாராம். ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; 2015 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டு இருந்தால் சாஹிர் மௌலானா தோல்வியடைந்து இருப்பார்.அவர் பிரதி அமைச்சராக-இராஜாங்க அமைச்சராக ஆகி இருக்க முடியாது. இந்த முறை நான் 26 ஆயிரம் விருப்ப வாக்குகளை பெற்று வெற்றி பெறுவேன்.புதிய வியூகம் வகுத்துச் செயற்படுகிறேன்.400 குழுக்கள் எனக்காக வேலை செய்கின்றன.  நானும் வென்று மற்றவர்களையும் வெல்ல வைக்கும் திட்டம்தான் என்னுடையது.நான் மட்டும் வெற்றிபெற  உடன் இருப்பவர் தோல்வியடைவதை நான் விரும்பவில்லை. கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் அதிக பாதிப்புக்களை சந்தித்தனர்.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும்கூட முஸ்லிம்களை பாதுகாக்கவில்லை.-என்றார்.
Local News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: தெரிந்திருந்தால் தடுத்திருப்பேன்
Mon, 27 Jul 2020 11:01:37 +0530
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எவரும் எனக்குத் தகவல் தரவில்லை.தந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்பேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதுபற்றிக் கூறுகையில்; பாதுகாப்புச் சபை முறையாகக்கூடவில்லை.அதற்கு சட்டரீதியான அதிகாரமும் இல்லை.மூன்று வாரத்துக்கு ஒரு தடவை அல்லது நான்கு வாரத்துக்கு ஒரு தடவை என்ற அடிப்படியில்தான் கூடியது. சட்ட,ஒழுங்கு அமைச்சு மைத்திரியிடம் இருந்தது.அதைத் தருமாறு பல தடவை கேட்டேன்.அவரைக் கொலை செய்வதற்கு எடுத்த சதி தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் அது முடிந்த பின் தருவதாகவும் கூறினார்.ஆனால்,தரவில்லை. அந்த அமைச்சை எங்களிடம் தந்திருந்தால் எனக்கு இந்தத் தாக்குதல் பற்றி தகவல் கிடைத்திருக்கும்.முன்பு அந்த அமைச்சு எங்களிடம் இருந்தபோது அதனூடாகவே எனக்குத் தகவல் கிடைத்தது. தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் நிச்சயம் தாக்குதலைத் தடுத்து இருப்பேன்.-என்றார்.
Local News
நாடாளுமன்றில் எம்பிக்கள் சத்தியப்பிரமாணம் எடுப்பதில் சிக்கல்: ஏன் தெரியுமா?
Sat, 25 Jul 2020 09:43:52 +0530
நாடாளுமன்த் தேர்தல் முடிந்து புதிய எம்பிக்கள் நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவேண்டிய கட்டாயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டுள்ளமையே இதற்குக் காரணம். 225 உறுப்பினர்களுக்காக 232 ஆசனங்கள் சபையில் உள்ளன.ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணும் அளவுக்கு சபைக்குள் இடமில்லை.மேலதிகமாக ஆசனங்களை போடுவதற்கும் அதற்குள் இடம் போதாது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைப்படி புதிதாக எம்பிக்கள் சத்தியப்பிரமாணம் செய்யும்போது அணைத்து எம்பிக்களும் சபைக்குள் இருக்க வேண்டும். இதனால் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது நாடாளுமன்ற நிர்வாகம்.
World News
அன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஏழைகளுக்கு  உதவும் இளைஞன்
Sat, 25 Jul 2020 06:16:24 +0530
வேலை தேடி சென்னைக்கு வந்து வேலை கிடைக்காமல் யாசகம் எடுத்து வந்தவர் இன்று டீ விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கி பசி ஆற்றி வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தமிழரசன். பிஎஸ்சி டிகிரி முடித்துள்ளார்.இவர் சிறு வயதில் தனது பெற்றோரை இழந்தார்.அவரது தந்தையின் நண்பர் ஒருவர் இவரை விருதுநகரில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். படிப்பை முடித்தவுடன் எப்படியும் சென்னை சென்றால் வேலை கிடைத்துவிடும் என்று கருதி வந்தவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை.செய்வதறியாமல் திகைத்தவர் சென்னை மெரினாவில் தனது உடமைகளுடன் ஒதுங்கினார்.அப்போது அவரது உடைமைகள் மட்டுமின்றி, படித்த சான்றிதழ்ளையும் யாரோ எடுத்துச் சென்றனர். இதனால் மிகவும் கவலைப்பட்டு இருந்த தமிழரசன் சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.வழியில்லாமல் மெரினா பீச்சில் யாசகம் எடுத்து பிழைக்கத் துவங்கினார். கிடைத்த காசில் தானும் உணவு வாங்கி சாப்பிட்டு, ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளார். கொரோனா தொற்று வந்ததால், ஊருக்கும் செல்ல முடியாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இறுதியில் ஊருக்கு திரும்ப முடிவு எடுத்தவரால், மதுரையை தாண்டி செல்ல முடியவில்லை. அலங்காநல்லூர் பகுதியில் தங்கினார். சென்னையில் யாசகம் பெற்று கிடைத்த 8000 ரூபாய் அவரிடம் இருந்துள்ளது. அதை வைத்து அங்கு ஒரு வீடு எடுத்து தங்கினார். டீ போட்டு விற்கத் துவங்கினார். தினமும் அவருக்கு 600 முதல் 1000 வரை வருமானம் கிடைக்கத் துவங்கியது.  இந்த வருமானத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்து, உணவுப் பொருட்கள் வாங்கி பொட்டலங்களாக போட்டு உணவு இன்றி தவித்து வந்தவர்களுக்கு உதவியுள்ளார்.      
World News
மகளின் ஆன்லைன் வகுப்புக்கு மாட்டை விற்று செல்போன் வாங்கிய அப்பா
Sat, 25 Jul 2020 05:55:48 +0530
லாக்டவுன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.பல வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு லேப்டாப், கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் தேவை என்பதால் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை அறிவித்துள்ளனர். அந்த மாநிலத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள கும்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் குமார். பால் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் மகள் அனு, மகன் வான்ஸ். இருவரும் முறையே, நான்கு மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்மார்ட்போன் இல்லை. குல்தீப்பிடம் பணமும் இல்லை. இதனால் கடன் வாங்கியாவது ஸ்மார்ட்போன் வாங்க முயன்றார். அருகில் உள்ள வங்கிக்குச் சென்று கேட்டார். லோன் தர மறுத்துவிட்டனர். அக்கம் பக்கத்திலும் கடன் கேட்டுப் பார்த்தார். கையை விரித்துவிட்டனர் பிறகு, நொந்து போன அவர், படிப்பு முக்கியம் என்று கருதி, தனது வாழ்வாதாரமாக இருந்த பசுமாட்டை விற்றுவிட்டார் குல்தீப். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ரூ.6 ஆயிரம் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்திருக்கிறார் அவர். இதுபற்றிய செய்தி அங்குள்ள பத்திரிகைகளில் வெளியானது. இதைக் கண்ட சிலர் அதை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தனர். இதைக் கண்ட நடிகர் சோனு சூட், அதை தனது ட்விட்டரில் பக்கத்தில் ஷேர் செய்து, இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். அவரது பசுமாட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Local News
சஹ்ரானின் சர்ச்சைக்குரிய மதர்ஸாவுக்கு  ஜனாதிபதி ஆணைக்குழு விஜயம் 
Fri, 24 Jul 2020 19:46:39 +0530
ஸஹ்ரான் குழுவினரால் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது என்று கூறப்படும் வனாத்தவில்லு,  கரைத்தீவு அல்-சுஹைரியா மத்ரஸாவுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று சென்று விசாரணை நடத்தினர். அந்த மத்ரஸாவின் அதிபர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.2008 முதல் 2018 வரை நடத்திச் செல்லப்பட்ட இந்த மதரஸாவில் தாய்-தந்தையரை இழந்த 40 மாணவர்கள் கல்வி கற்றனர் என்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. சிஐடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மதரஸாவில் கல்வி பயின்ற 14 வயது மாணவனே இந்தத் தகவலை சிஐடியினருக்கு வழங்கி இருந்தான். அதற்கு ஏற்ப ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தினர். 
Local News
ஆட்சியைப் பிடிக்கும்வரை மரணிக்கமாட்டாராம் ஞானசார: 2015 இல் மஹிந்தவை தோற்கடித்தது தேரர்களாம்:
Tue, 21 Jul 2020 08:15:24 +0530
2025 இல் அல்லது 2030 இல் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவாராம் ஞானசார தேரர். நாட்டின்  ஆட்சியைக் கைப்பற்றிய பின்தான் நான் மரணிப்பேன்.இல்லையென்றால் நாட்டின் எதிர்காலம் அவ்வளவுதான் என்றும் அவர் கூறியுள்ளார். குருநாகலில் அவரது கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.மேலும் கூறுகையில்; தேரர்கள் நாட்டின் அரசியல்வாதிகளைவிட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2015 இல் மஹிந்தவைத் தோற்கடித்தது தேரர்கள்தான்.அந்தளவு சக்தி தேரர்களிடம் உண்டு.தேரர்களின் சிந்தனை அரசியல்வாதிகளின் சிந்தனைப்போல் இருக்கக்கூடாது. அரசியல் அதிகாரம் இல்லாமல் எம்மால் எதுவும் செய்ய முடியாது.இது சிங்கள நாடு.சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நாடு.இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்காக எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். நாம் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் நாட்டை நாசம் செய்கிறார்கள்.இன்று ஒரு சாராயக் கடை வைத்திருக்கும் ஓர் அரசியல்வாதி தேர்தலில் வெற்றிபெற்று பல சாராயக் கடைகளைத் திறக்கிறார். ஆகவே,2025 இல் அல்லது 2030 இல் நாம் ஆட்சியைப் பிடிப்போம்.நாட்டைப் பாதுகாப்போம்.அதுவரை மரணிக்கமாட்டேன்.என்றார்.  
Local News
ஒரு மாதத்தில் 1100 கைத் தொலைபேசிகள்: சிறைச்சாலைகளில் சிக்கின
Sun, 19 Jul 2020 09:18:25 +0530
சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கடந்த மாதம் மாத்திரம் 1102 கைத்தொலைபேசிகள் சிக்கின என்று பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது. மேலும்,சிம் அட்டைகள் 1310,பற்றிகள் 84,சாஜர் 2083 உம் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்குமுன் சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் முறையாக அழிக்கப்படவோ அல்லது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவோ இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் பதவியேற்றதன் பின் சிறைச்சாலையில் கைப்பற்றப்படும் பொருட்கள் அனைத்தும் பொலிஸாரிடம் முறையாக ஒப்படைக்கப்படும் என்று சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனெரல் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
Crime Story
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 
Wed, 29 Sep 2021 08:58:48 +0530
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன். கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us