Local News
தேசிய பட்டியல் அகிலவுக்கு!!!
Sun, 18 Oct 2020 06:13:45 +0530
இன்னும் வெற்றிடமாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தை நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. இதற்காக பலரின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இருந்தும்,இளம் உறுப்பினர் ஒருவரே நாடாளுமன்றில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அகிலவையே நியமிப்பதற்கு ரணில் விரும்புகிறார் என்று தெரிய வருகிறது. இருந்தும்,நாளை இடம்பெறும் அக்கட்சியின் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரம் மேலும் தெரிவிக்கின்றது.
Local News
நவம்பர்வரை விலைக்குறைப்பு இல்லை!
Sun, 18 Oct 2020 05:50:19 +0530
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளபோதிலும்,அப்பொருட்களுக்கான விலைகள் நவம்பர் மாதம்வரை குறைக்கப்படாது என்று இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் இது தொடர்பில் கூறுகையில்; தற்போதைய வரிக்குறைப்பின் கீழ்  இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையை வந்து சேர்வதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். அதற்கு முன் விலையைக் குறைத்தால் வர்த்தகர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும்.இப்போது சண்டையில் இருக்கும் பொருட்கள் பழைய வரியின்கீழ் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். ஆகவே,நவம்பர் மாதம்வரை விலைகள் குறைவதற்கு வாய்ப்பில்லை.என்றார்.  
Local News
பல் தூரிகைகளுக்கு ஏன் ஹலால் சான்றிதழ்? உலமா சபை விளக்கம்
Fri, 09 Oct 2020 17:58:14 +0530
பல் தூரிகைகளுக்கு பன்றியின் மயிர்கள் பயன்படுத்தப்படுவதாலேயே நாம் பன்றியின் மயிர்களில் செய்யாத பல் தூரிகைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டியுள்ளது என்று உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்த உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தியிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். பன்றி அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹராம்.அதாவது ,தடை செய்யப்பட்டது.இதன் உறுப்புகள் ஒரு முஸ்லிமின் உடலுக்குச் செல்வது தடை.அவ்வாறே,பன்றி மயிர்களில் தயாரிக்கப்படும் பல் தூரிகை வாயில் படுவது ஹராமாகும் என்றார். இருந்தும்,நாம் பல் தூரிகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கினோமா என்று நினைவில்லை என்றும் ரிஸ்வி முப்தி அங்கு கூறினார்.  
Local News
இலங்கையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தொடர்பில் 16 அறிக்கைகள்:மதத் தீவிரவாதம் தொடர்பில் 6 அறிக்கைகள்
Wed, 07 Oct 2020 09:29:50 +0530
இலங்கையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் 13 அறிக்கைகளும் மத தீவிரவாதம் தொடர்பில் 6 அறிக்கைகளும் தனக்குக் கிடைத்தன என்று முன்னாள் சட்ட,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளிக்கும்போதே இவாறு கூறினார். 2016 ஜூலை 20 ஆம் திகதி ஐ.எஸ் தொடர்பில் அரச புலனாய்வு சேவையிடம் இருந்து முதலாவது அறிக்கை கிடைத்தது.அதனைத் தொடர்ந்து மொத்தம் 13 அறிக்கைகள் கிடைத்தன. .ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இலங்கையை சேர்ந்த தஸ்தகீர் அஹமட் என்ற நபர் சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நான் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டேன். எனது பதவிக்கு காலத்தில் நாட்டின் சட்ட,ஒழுங்கு தொடர்பில் 407 புலனாய்வு அறிக்கைகள் எனக்கு கிடைத்தன.அந்த அறிக்கைகளுள் 13 ஐ.எஸ் பற்றியவை.6 அறிக்கைகள் மதத் தீவிரவாதம் பற்றியவை. நாட்டின் பாதுகாப்பு நிலவர அறிக்கைகள் எனக்கு பொலிஸாரால் தினமும் வழங்கப்பட்டன.அவை ஜனாதிபதி,பிரதமர் ,சபாநாயகர் மற்றும் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டன. அதில் உள்ள சில முக்கியமான விடயங்களை பொலிஸ்மா அதிபருடன் கலந்தாலோசித்தேன்.சில முக்கிய விடயங்களை பிரதமருடன் கலந்தாலோசித்தேன். என்றார்.  
Local News
திஸ்ஸ-ரிசாத் கடும் மோதல்:நாடாளுமன்றில் நடந்த கூத்து  
Wed, 07 Oct 2020 07:36:29 +0530
ரிசாத் பதியுதீன் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நாடாளுமன்றில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று முன் தினம் 5 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் தலைமையில் நாடாளுமன்றத் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.அப்போதே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.  ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர் 20 ஆவது தீர்த்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்கும் அதற்குப் பலனாக ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்வதற்கும் மறைமுகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று திஸ்ஸ அத்தநாயக்க ஏற்கனேவே ஒரு நிகழ்வில் கூறி இருந்தார். இந்த விவகாரம் மேற்படி நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் எதிரொலித்தது.என்னைப்பற்றியும் எனது கட்சியைப் பற்றியும் விமர்ச்சிக்கும் தகுதி திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு இல்லை என்று ரிசாத் பதியுதீன் அங்கு  கூறினார். இதனைத் தொடர்ந்தே அங்கு இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் தெரிவிக்கின்றது. 
Local News
20 ஆவது திருத்தத்துக்கு றிஸாத்தின் ஆதரவு வேண்டாம்: ரியாஜின் விடுதலைபற்றி அரசு ஆராய வேண்டும் 
Wed, 07 Oct 2020 06:10:51 +0530
20 ஆவது திருத்தச் சட்டத்துக்கோ அல்லது வேறு எதற்கோ றிசாத் பதியுதீனின் ஆதரவு தேவை இல்லை என்று அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பின் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; றிசாத் பதியுதீனுடன் எமது அரசுக்கு அரசியல்ரீதியான தொடர்புகள் எவையும் இல்லை.இனியும் தொடர்பு வைக்கமாட்டோம். மக்கள் எமக்குத் தந்த ஆணையை நிராகரித்து இவ்வாறானவர்களுடன் தொடர்புகளை பேனமாட்டோம்.20 ஆவது திருத்தச் சட்டத்துக்கோ அல்லது வேறு எதற்கோ றிசாத் பதியுதீனின் ஆதரவு தேவை இல்லை.எம்மிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தாராளமாக உண்டு. அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரச்சினை உண்டு.இது தொடர்பில் அரசு விசாரணை நடத்த வேண்டும்.என்றார்.
Local News
ரணிலுக்கு சுகமில்லை:விசாரணையின் நடுவில் வீடு திரும்பினார் 
Tue, 06 Oct 2020 13:25:47 +0530
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று ஆஜரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுகவீனம் காரணமாக விசாரணையின் நடுவில் வீடு திரும்பினார். ரணிலின் உடல்நிலை சரி இல்லை என்பதால் அவர் சாட்சியமளிப்பதற்கு பிறிதொரு தினத்தை ஒதுக்கித் தருமாறு ரணிலின் சார்பில் ஆணைக்குழு முன் ஆஜரான அவரது சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா அப்போது ஆணைக்குழுவின்  நீதிபதிகள் குழாமிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு ஏற்ப விசாரணை இடைநிறுத்தப்பட்டு அதற்காக பிறிதொரு தினம் அவருக்கு வழங்கப்பட்டது. அதன்படி,இந்த மாதம் 13 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ரணில் மீண்டும் ஆஜராகி சாட்சியமளிப்பார்.
Local News
நாடு முழுவதும் ஊரடங்கு:போலி செய்தி பரப்பியவர்களைத் தேடுகிறது பொலிஸ்!
Tue, 06 Oct 2020 13:02:51 +0530
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று  சமூக ஊடகங்களில் போலிச் செய்தியை பரப்பியவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். இதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியைத் தயாரித்தவர்கள் முதல் சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள்வரை எல்லோரையும் தேடுவதாக அவர் மேலும் கூறினார். இது சம்பந்தமாக அவர் சி.ஐ.டியின் பணிப்பாளருடன் பேசியுள்ளார் என்றும் அஜித் ரோஹன கூறினார்.
Local News
சகோதரனின் விடுதலை அரசியலோடு தொடர்புபட்டதல்ல!
Mon, 05 Oct 2020 07:31:23 +0530
எனது சகோதரனின் விடுதலை அரசியலோடு தொடர்புபட்டதல்ல.அவர்மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனது சகோதரர் தொடர்புபட்டார் என்று தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டார்.இப்போது அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விடுதலையில் அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன். நான் பயங்கரவாதத்துக்கு எதிரானவன்.தேர்தலில் வெற்றிபெறுவதற்காக என்மீது  பழிசுமத்தப்பட்டது.இப்போது அது பொய் என்று நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது என்றார்.
Local News
கலீல் ரஹ்மானின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 
Mon, 05 Oct 2020 06:24:40 +0530
நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வபாத்தான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் செய்தி வாசிப்பாளரும் இலங்கை  துறைமுக அதிகார சபையின் நிருவாக உத்தியோகத்தருமான ஏ.சி.எம்.கலீலுர் ரஹ்மானின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை கல்லரிச்சல்,மரைக்கார் வீதி 297/2 இலக்க முகவரி இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸா இன்று அதிகாலை மூன்று மணியளவில் கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.அனைவரும் அண்ணாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்திப்போம்.  
Local News
றிசாத் வந்தால் விரட்டுவோம் 
Mon, 05 Oct 2020 06:04:55 +0530
றிசாத் பதியுதீன் அரசில் இணைவதற்கு வந்தால் அவரை விரட்டிவிடுவோம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் கருத்துக் கூறுகையில்; இது நாம் உருவாக்கிய அரசு.இங்கு நாம்தான் இருப்போம்.றிசாத் பதியுதீன் இணைவதற்கு வந்தால் அவரை விரட்டிவிடுவோம்.அவரை அரசில் இணைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.இணைக்க வேண்டும் என்று கூறுகின்ற மடையர்கள் எவரும் அரசில் இல்லை.  அரச நிகழ்வுகளுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் வருவது சகஜம்.அதை வைத்துக்கொண்டு அவர்கள் அரசில் இணையப்போகிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்றது.என்றார்.
Local News
றிசாத்தை அரசுடன் இணைப்பதுபற்றி பேசப்பட்டதா?
Sat, 03 Oct 2020 07:50:58 +0530
தான் கலந்துகொண்ட வவுனியா நிகழ்வில் றிசாத் பதியுதீனும் கலந்துகொண்டதை வைத்துக்கொண்டு அவர் அரசில் இணையப்போகிறார் என்று கூறப்படும் செய்தியை அமைச்சர் சமல் ராஜபக்ஸ மறுத்துள்ளார். றிசாத் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் அந்த நிகழ்வில் றிசாத்தை அரசுடன் இணைப்பதுபற்றி பேசப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும்,20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதற்கு போதுமான உறுப்பினர்கள் அரசிடம் இருப்பதால் எவரையும் அரசுடன் இணைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் சொன்னார். றிசாத் அரசுடன் இணையவுள்ளார் என்று கூறப்படும் செய்தி தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஸவிடம் வினவியபோதே இவ்வாறு கூறினார்.
Local News
6 பிச்சைக்காரர்கள் கைது:பல லட்சம் ரூபா வங்கி கணக்கில்:கடன் அட்டைகளும் கைகளில்!
Thu, 01 Oct 2020 11:14:31 +0530
தமது வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபா பணத்தை சேமிப்பில் வைத்துக்கொண்டு பிச்சை எடுத்துத் திரிந்த 6 பேரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள்.மூவர் பெண்கள்.காலை முதல் மாலை வரை தினமும் இவர்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுகிறார்கள் என்று பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது இவர்களின் வங்கி கணக்கில் பல லட்சம் ரூபா பணம் இருப்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் வங்கிகளின் சிறந்த வாடிக்கையாளர்கள் என்ற பட்டியலிலும் உள்ளனர்.இவர்களிடம் கடன் அட்டைகளும் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்களை ரிதியகம புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Local News
இன்று முதல் கையடக்கத் தொலைபேசி வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை! 
Thu, 01 Oct 2020 10:09:01 +0530
இன்று முதல் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்கள் பதிவு செய்யப்பட கையடக்கத் தொலைபேசிகளை  மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாவனையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பதிவு செய்யப்படாத தொலைபேசிகளில் புகுத்தப்படும் சிம் அட்டைகள் இனி இயங்காது என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். புதிதாக கொள்வனவு செய்யப்படும் தொலைபேசியில் காணப்படும் IMEI இலக்கத்தை 1909 என்ற இலக்கத்துக்கு SMS செய்வதன்மூலம் அது பதிவு செய்யப்பட்டதா,இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார். முதலாம் திகதிக்கு முன் பாவனையில் இருக்கும் தொலைபேசிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Crime Story
Sat, 24 Oct 2020 14:19:32 +0530
Popular News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us