Local News
800 சீனி கொள்கலன்கள் துறைமுகத்தில்:இறக்குவதற்கு டொலர் இல்லை
Sun, 19 Dec 2021 08:15:34 +0530
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலன்கள் 800 டொலர் தட்டுப்பாடு காரணமாக முடியாமல் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன என்று சீனி இறக்குமதி சங்கத்தின் தலைவர் பரக்கும் அபேசேகர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் 1500 துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் உள்ளன.அவற்றுள் இந்த 800 சீனி கொள்கலன்களும் அடங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இவற்றை உடனடியாக இறக்காவிட்டால் சீனித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் விலை அதிகரிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
Local News
முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகளிடம் இப்படிக் கூறுகிறது அரசு 
Sat, 18 Dec 2021 11:29:59 +0530
முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் தனியான சட்டம் உண்டு என்று முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் பொய் கூறிக்கொண்டு மறுபுறம் ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது இந்த அரசு என்று குற்றச்சாட்டியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தி எம்பி அசோக அப்யசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் வந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் தனியாக சட்டம் உண்டு என்று கூறுகிறார்கள்.அவ்வாறு கூறிக்கொண்டு பிரச்சினைக்குரிய-இனவாதம் பேசுகிற ஞானசார தேரரைப் போட்டு ஒரே நாடு ஒரே சட்டம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். சொல்வது ஒன்று  செய்வது ஒன்று.நாட்டு மக்களுக்கு ஒன்றைச் சொல்கிறார்கள் வெளிநாடுகளுக்கு ஒன்றைச் சொல்கிறார்கள். இந்த அரசின் செயற்பாடுகள் பிழைத்துப்போகின்றன.அப்பாவி மக்களின் இரத்தத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் எல்லாமே பிழைத்துப் போகும்.என்றார்.
Local News
பேக்கரிகள் பலவற்றுக்கு மூடு விழா;நாட்டின் தற்போதைய நிலைமை 
Sat, 18 Dec 2021 08:49:08 +0530
நாடு பூராகவும் மீண்டும் கேஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நாட்டில் உள்ள மொத்த பேக்கரிகளில் அரைவாசி மூடப்பட்டுள்ளன என்று அறிய முடிகிறது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே .ஜயவர்தன இதைத் தெரிவித்துள்ளார்.  இன்னும் சில நாட்களில் கேஸ் கிடைக்காவிட்டால் அணைத்து பேக்கரிகளும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார். இதேவேளை,பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் விற்பனை 40 வீதத்தால் குறைவடைந்துள்ளது என்றும் இதனால் சிலர் பேக்கரிகளை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளனர் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Local News
முஸ்லிம்களுக்கு எதிராக அன்று பாவித்த இனவாதம் இன்றும்...
Mon, 13 Dec 2021 19:18:39 +0530
அன்று ஆட்சியைப் பிடிப்பதற்குப் பாவித்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத்தான் இப்போதும் இந்த அரசு பாவிக்கிறது என்று நலின் பண்டார எம்பி கூறினார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துக்கூறும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்,  தேர்தலை நடத்திப் பாருங்கள்.இருந்த இடம் தெரியாமல் போவீர்கள் அமைச்சர்கள் ஊர்களுக்கு செல்ல  முடியாதுள்ளது.அவர்களே எம்மிடம் சொல்லிப் புலம்புகிறார்கள்.அதுதான் உண்மை.  கடந்த தேர்தலில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை நன்றாகப் பரப்பியே ஆட்சியைப் பிடித்தார்கள்.இதைத் தொடர்ந்து செய்வார்கள். றிசாத் பதியுதீன்,அசாத் சாலி போன்றவர்களே உயிர்த்த ஞாயிரு தாக்குதலை நடத்தினார்கள் என்பதுபோலவே பிரச்சாரம் செய்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்குவதற்கு இவர்கள் இரண்டு பேரையும்தான் அரசு பாவித்தது. ஞானசார ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு நியமிக்கப்படுத்துள்ளார். இது அனைத்தையும்  வைத்துப் பார்க்கும்போது அன்று பாவித்த அதே இனவாதத்தைத்தான் இப்போதும் பாவிக்கிறார்கள் என்பது புரிகிறது.என்றார்.
Local News
அரிசி ஒரு கிலோ ரூ.300;பருப்பு ரூ.350
Mon, 13 Dec 2021 10:32:03 +0530
அடுத்த வருடம் முதல் அரிசி ஒரு கிலோவின் விலை 300 ரூபாவாகவும் பருப்பு ஒரு கிலோவின் விலை 350 ரூபாவாகவும் அதிகரிக்கும் என்று அசோகா அபயசிங்க எம்பி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில். விலைவாசி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை.இதனால் பொருட்களின் விலைகள் பல மடங்குகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புண்டு. அடுத்த வருடம் முதல் அரிசி ஒரு கிலோவின் விலை 300 ரூபாவாகவும் பருப்பு ஒரு கிலோவின் விலை 350 ரூபாவாகவும் அதிகரிக்கும்.மக்கள் உயிர் வாழ முடியாத நிலைதான் ஏற்படப்போகிறது. அரசின் பிழையான நிர்வாகமே இதற்குக் காரணம்.எதிர்காலத்தில் இந்த நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளப்போகிறது என்றார்.
Local News
கடன் கேட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் 
Mon, 13 Dec 2021 08:21:24 +0530
இலங்கையின் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் வெளிநாட்டு கடன்களை அடைப்பதற்கும் இலங்கை அரசுக்கு டொலர் தேவைப்படுகிறது.அந்த டொலரைக் கடனாகப் பெறுவதற்காக மத்திய கிழக்கு நாடுகளை நாடியுள்ளது இலங்கை அரசு. இலங்கை மத்திய வங்கியின் தூதுக்குழு ஒன்று கடன் கேட்டு கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு நேற்று முன்தினம் 11ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதேவேளை,கடன் தேவைக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு அறிவுரை கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Local News
ரூ.1000 மண்ணெண்ணெய் அடுப்பு இப்போது ரூ.8 ஆயிரம்: கேஸ் வெடிப்பின் எதிரொலி 
Mon, 13 Dec 2021 07:04:28 +0530
கேஸ் வெடிப்பு காரணமாக அதிகமான மக்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர்.ஆனால்,கொழும்பு போன்ற நகர் புறங்களில் வாழும் மக்களுக்கு அது சாத்தியமில்லை. கேஸ் அடுப்பு இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு மாற்றுவழி மண்ணெண்ணெய் அடுப்புதான். அந்த அடுப்புகளுக்கான கிராக்கி உயர்ந்துள்ளதால் அவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கொழும்புபோன்ற இடங்களில் 1000 முதல் 1500 ரூபாவரை விற்கப்பட்ட அடுப்புகள் இப்போது 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளன என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சந்தர்ப்பதைப் பயன்படுத்தி மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் சிலர் வர்த்தகர்கள்.
Local News
வருமானம் இல்லை:திருட்டுத் தொழிலில் மக்கள்:  36 புதிய சம்பவங்கள் அண்மையில் 
Sun, 12 Dec 2021 16:18:13 +0530
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக சாதாரண-கௌரவமான மக்களும் திருடர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துக் கூறுகையில்; மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள்தான் தற்போதையை பொருளாதார நிலைமையால் மேலும் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் சொன்னார்.அது அதிசயமான தகவல்.கடந்த ஓரிரு நாட்களில் 36 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு,கடைகளுக்குத் திருடச் சென்று மக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டவர்கள். அடிப்படையில் அவர்கள் திருடர்கள் அல்லர்.உண்மையான திருடர்கள் என்றால் சிக்கமாட்டார்கள்.எப்படித் தப்புவதென்று தெரியும்.அது திருடர்களின் திறமை-அனுபவம். இவர்கள் வருமானமின்றி-வாழ வழியின்றி திருடச் சென்றவர்கள்.அந்தளவுக்கு மோசமாக இருக்கிறது பொருளாதார நிலைமை.என்றார்.
Local News
ஜனவரி நடுப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு 
Sun, 12 Dec 2021 09:20:05 +0530
அடுத்த மாதம் ஜனவரி நடுப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது உறுதியென்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் எம்பியுமான ரஞ்ஜித் மதுமபண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் இலங்கை நாணயத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். அவ்வாறு இலங்கை நாணயத்தில் ஒருபோதும் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது என்றும் அது கேலிக்கூத்தான செயற்பாடு என்றும் மதுமபண்டார தெரிவித்துள்ளார்.
Local News
ரூ.1 கோடி நீர்க் கட்டணம்:இழுத்தடிக்கும் 40 எம்பிக்கள்  
Sun, 12 Dec 2021 08:50:24 +0530
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நீர் கட்டணம் செலுத்தாமல் இழுத்தடிக்கின்றனர் என்று நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுள் ஒருவர் 18 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அந்த அரசியல்வாதி பில் கட்டணத்தைச் செலுத்தாது தவிர்த்து வருகிறார் என்று அறிய முடிகிறது. அந்த 40 பேரில் தற்போது அமைச்சர்களாகவும் எம்பிக்களாகவும் உள்ள 20 பேர் அடங்குகின்றனர்.10 பேர் ஓய்வூதியம் பெற்றுவரும் எம்பிக்கள்.10 பேர் உயிருடன் இல்லை.
Crime Story
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 
Wed, 29 Sep 2021 08:58:48 +0530
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன். கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us