World News
ஒரே நேரத்தில் 2000  பேர் தொழலாம்: அயோத்தியில் புதிய பள்ளிவாசல்: 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையும்!
Wed, 26 May 2021 08:59:35 +0530
ஒரே நேரத்தில் 2000 பேர் தொழக்கூடிய விசாலமான பள்ளிவாசல் ஒன்று அயோத்தியில் அமைக்கப்படவுள்ளது.கூடவே 300 படுக்கைகளைக்கொண்ட வைத்தியசாலை ஒன்றும் கட்டப்படவுள்ளது. அயோத்தி பாபர் மஸ்ஜித் வழக்கில் அந்த பள்ளிக்கு பதிலாக புதிதாக பள்ளிவாசல் அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கமைய மாநில அரசு பாபர் மஸ்ஜித் அமைந்துள்ள இடத்தில் இருந்து 24 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் வக்பு சபைக்கு வழங்கியது. அதில் மேற்படி பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
World News
ஓரிரு நாட்களில் போர் நிறுத்தம் 
Thu, 20 May 2021 10:30:04 +0530
ஓரிரு நாட்களில் ஹமாஸ்-இஸ்ரேலிடையே போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று ஹமாஸ் அரசியல் பிரிவு அதிகாரி மௌஸா அபு மர்சூக் லெபனான் தொலைக்காட்சியான அல்-மயதீன் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக பல தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஓரிரு நாட்களில் வெற்றி பெரும் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால்,இப்போது வரைக்கும் இரு தரப்பிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டே செல்கின்றன என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தமது இலக்கை எட்டும்வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
World News
இஸ்ரேலின் தாக்குதல் இனவாதம் கொண்டது: தென் ஆபிரிக்க ஜனாதிபதி கண்டனம் 
Thu, 20 May 2021 09:31:33 +0530
கஸாமீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா வன்மையாகக் கண்டித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அணைத்து உரிமைகளும் உள்ளன.அதை இஸ்ரேலால் தடுக்க முடியாது என்று அவர் பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். அந்த மக்களின் எல்லா வகையான உரிமைகளையும் மறுத்துவிட்டு அவர்கள்மீது குண்டு போட்டு அவர்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதை இஸ்ரேல் உடன் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
World News
100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக!
Wed, 19 May 2021 20:25:01 +0530
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி மாவட்டத்தில் அமைந்திருந்த 100 வருடம் பழமையான பள்ளிவாசல் ஒன்றை அரச நிர்வாகிகள் இடித்துள்ளனர். பாஜக சார்பு இனவாத சிந்தனைகொண்ட அரச நிவாகிகள் இதை இடித்துள்ளனர் என்று அப்பகுதி முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பள்ளிவாசல் இடிப்பதை அப்பகுதி முஸ்லிம்கள் தடுப்பார்கள் என்பதற்காக நூற்றுக்கணக்கான பொலிஸாரை பகுதி முழுவதும் பாதுகாப்பில் நிறுத்திவிட்டே இந்தப் பள்ளிவாசலை இடித்துள்ளனர். இதை எதிர்த்த 30 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முழு பகுதியையும் அச்சுறுத்தி அடக்கிவிட்டே பள்ளியை பிடித்துள்ளனர். இடிக்கும்போது மக்கள் வீடுகளின் ஜன்னல்களைத் திறப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்துக்குத் தடையாக இருக்கும் சட்டவிரோதக் கட்டடம் என்று தெரிவித்தே இதைத் தகர்த்துள்ளனர்.தகர்த்த சில சிதைவுகளை ஆற்றுக்குள் தள்ளியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வரும் உத்தரப்பிரதேசத்தின் பாஜக முதல்வர் யோகி ஆதித்யாவின் உத்தரவின்பேரிலேயே இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறுகின்றன.         
World News
கூகுள் நிறுவனத்தின் யூத பணியாளர்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு: இஸ்ரேலை கண்டிக்குமாறு சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை 
Wed, 19 May 2021 19:29:14 +0530
கசாமீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாமல் யூதர்களே இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் யூத இனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் இஸ்ரேலை கடுமையாகக் கண்டித்துள்ளனர். கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர்பிச்சையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட யூத ஊழியர்கள் கையெழுத்திட்டு அந்தக் கோரிக்கை கடிதத்தை சுந்தர் பிச்சையிடம் கையளித்துள்ளனர். 
World News
மேற்கு வங்கத்தில் 42 முஸ்லிம் MLA க்கள் தெரிவு 
Tue, 04 May 2021 19:06:28 +0530
292 ஆசனங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்ட சபைக்கு 42 பேர் முஸ்லிம் MLAக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முதலவர் மம்தா பேனர்ஜி 42 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி இருந்தார்.அவர்களுள் ஒருவரைத் தவிர 41 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் வேறு ஒரு கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார். மம்தாவின் கட்சியில் வெற்றி பெற்ற 41 முஸ்லிம்களுல் ஹுமாயுன் கபீர் என்ற பொலிஸ் ஆணையாளர் ஒருவரும் அடங்குகிறார்.  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்து பரபரப்பாகப் பேசப்பட்டவர் அவர்.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பதவியை இராஜினாமா செய்தார்.வெற்றியும் பெற்றார். அதேவேளை பாஜகவில் 77 பேர் தெரிவானபோதும் அதில் ஒருவரும் முஸ்லிம்கள் இல்லை. மேலும்,அசாருதீன் உவைஸ் 5 வேட்பாளர்களை களமிறக்கி இருந்தார்.அனைவரும் தோல்வியடைந்துவிட்டனர். இந்தத் தேர்தலில் 42 முஸ்லிம்கள் வெற்றிபெற்றபோதிலும் 2016 மற்றும் 2011 தேர்தலை ஒப்பிடும்போது இது வீழ்ச்சியாகும்.அந்தத் தேர்தல்களில் முறையே 56 மற்றும் 59 முஸ்லிம்கள் தெரிவாகி இருந்தனர். 2011 இல் 59 2016  இல் 56 2021 இல் 42
Local News
சும்மா கிடக்கும் தாமரைத் தடாகம்: கொரோனா சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்தவும்
Tue, 04 May 2021 13:46:05 +0530
கொழுப்பு தாமரைத் தடாகம் சும்மாவே கிடக்கிறது என்றும் அங்கு கட்டில்களை நிரப்பி கொரோனா சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்துமாறு ராஜித சேனாரத்ன  இன்று நாடாளுமன்றில் கூறினார். கொரோனா தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்; கொரோனா தொடர்பில் ஆய்வுகளை நடத்திய இலங்கை வைத்திய நிபுணர்கள் வேறுபட்ட கொரோனா வைரஸ்கள் இலங்கையை பாதிக்கக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது என்று ஏப்ரல் 8 ஆம் திகதி கூறி இருந்தனர். அரசு அதை புறக்கணித்து செயற்பட்டதால் இன்று கொரோனா பரவல் அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒக்ஸிசன் தேவைப்படும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. மொத்த சனத்தொகையில் 70 வீதத்துக்கேனும் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.அது முடியாமல் போயுள்ளது.திறமையான வைத்திய நிபுணர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். கொழுப்பு தாமரைத் தடாகம் சும்மாவே கிடக்கிறது.அங்கு கட்டில்களை நிரப்பி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுங்கள்.இரண்டாம் நிலை வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை வழங்கினால் அங்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.என்றார்.   
World News
ஸ்டாலின் முதல்வர்: நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்
Mon, 03 May 2021 20:47:09 +0530
ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியை பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இதையடுத்து அவர் முத்தாலம்மன் கோவிலில் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Local News
முரளிதரன் வைத்தியசாலையில் !
Mon, 19 Apr 2021 06:07:47 +0530
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை முரளிதரன் மேற்கொண்ட நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு, தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
World News
விவேக்கின் மரணத்துக்கு இதுதான் காரணமா?
Sat, 17 Apr 2021 09:44:40 +0530
நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தமை பலரிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அவர் கொரோனா தடுப்பூசி ஏற்றியமைதான் அந்த மாரடைப்புக்குக் காரணமா என்ற கேள்வி இப்போது எல்லோர் மனங்களிலும் எழத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்தான் விவேக் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.அத்தோடு,ஏனையவர்களை போடுமாறு அவர் பிரசாரமும் செய்தார்.இந்த நிலையில்தான் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார். அந்தக் கொரோனா தடுப்பூசிதான் காரணமோ என்று எல்லோரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும்,ஏற்கனவே இந்தத் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பில் தமிழக அரசு உடன் விளக்கம் தர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
World News
16 ஆவது ஆண்டாக நோன்பு நோற்கும் திருமாவளவன்... 
Fri, 16 Apr 2021 14:35:36 +0530
ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் நோன்பு நோற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இம்முறையும் 5 நாட்கள் நோன்பு நோற்கின்றார். கடந்த ஆண்டு அவர் 2 நாட்கள் மட்டுமே நோன்பு வைத்த நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் நோன்பு நோற்கின்றார். இத்தோடு சேர்த்து அவர் 16 ஆவாது ஆண்டாக நோன்பு நோற்கின்றமை குறிப்பிடத்தக்கது. மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையிலேயே  திருமாவளவன்  நோன்பு நோற்று வருகிறார். நோன்பு நோற்கும் நாட்களில் திருமாவளவன் சென்னையில் இருந்தார் என்றால் சஹர், இஃப்தார் நிகழ்ச்சிகள் களை கட்டும். சாம்கோ, அபுபேலஸ் போன்ற உணவகங்களில் திருமாவளவனோடு சேர்ந்து சஹர் உணவு சாப்பிடுவதற்காக ஒரு பெரிய படையே குவியும்.அதேபோல் தன்னுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் திருமா அழைத்து இஃப்தார் விருந்து அளிப்பார். இந்நிலையில் இந்தாண்டு கொரோனா வைரஸ் 2ஆவது அலை பரவல் காரணமாக, ஹோட்டல்களுக்கு செல்வதை தவிர்த்து சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் மட்டுமே சஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் திருமா.
World News
நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு: ஜெயலலிதாவுக்கு வழங்கிய எக்மோ சிகிச்சை விவேக்குக்கும்  
Fri, 16 Apr 2021 14:17:41 +0530
நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு திணறலும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல் நிலையை பின்னடைவில் இருந்து மீட்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இதுபோன்று எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sports
கதிரையில் கையை அடித்து கோபத்தை வெளிப்படுத்திய சங்ககார 
Fri, 16 Apr 2021 13:54:23 +0530
நேற்று ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கார டெல்லிக்கு எதிரான ஆட்டம் நடக்கும்போதே கோபத்துடன் காணப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்தப் போட்டியில் டெல்லி படுதோல்வி அடைந்தது.கடைசி ஓவர்வரை திரில்லாக ஆட்டம் செல்ல, கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இந்த போட்டியில் இரண்டு அணியின் டொப் வீரர்களும் சரியாக ஆடவில்லை.இரண்டு அணியிலும் ஒப்பனர்கள் மோசமாக சொதப்பி அவுட் ஆனார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் எளிதாக வெற்றி அடைந்துவிடும் என்றுதான் கருதப்பட்டது.147 ரன்கள் எடுத்தால் போதும் என்பதால் ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன்தான் இறங்கியது.  சஞ்சு சாம்சன் மட்டுமே தனியாளாக இந்த போட்டியை முடித்துவிடுவார் என்றே கருதப்பட்டது.ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஓடரும் நன்றாக இருந்ததால் நம்பிக்கையுடன்தான் அந்த அணி களமிறங்கியது. ஆனால் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் இருந்தே வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.ராஜஸ்தானின் டொப் 4 வீரர்கள் வெறும் 17 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.பட்லர் 2 ரன்னுக்கும், வோஹ்ரா 9 ரன்னுக்கும் அவுட் ஆனார்கள். சஞ்சு சாம்சன் 4 ரன்னுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.இதுவரை ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கார பெரிய அளவில் முகத்தை உணர்ச்சியை காட்டிக்கொள்ளவில்லை.ஆனால் ஷிவம் துபேவும் 2 ரன்னுக்கு அவுட் ஆன நிலையில் சங்கக்கார கடும் கோபம் அடைந்தார். 4 விக்கெட் போனதும் மிகவும் கோபமாகக் காணப்பட்ட சங்ககார அருகில் இருந்த இருக்கையில் கையை வைத்து ஓங்கி அடித்தார். நேற்று கிறிஸ் மோரிஸ் களமிறங்கி கொஞ்சம் அதிரடி காட்டும் வரை சங்கக்கார  கோபமாக இருந்தார்.முகத்தில் அப்படியே வெளிப்படியாக இவர் டென்ஷனை காட்டினார். முதல் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்த போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்று அவர் நினைத்து இருப்பார்.அதோடு அதிகம் நம்பிய ராஜஸ்தான் டொப் ஓடரின் சரிவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதன் காரணமாகவே நேற்று சங்கக்கார போட்டி முழுக்க கோபத்துடன் காணப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.
Crime Story
றிஸாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமி மரணம் 
Fri, 16 Jul 2021 11:01:00 +0530
றிசாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவர் காயமுற்ற நிலையில் இந்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.நேற்று அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று மரண விசாரணை இடம்பெற்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us