Local News
ஜனாஸா அடக்கம்:மேலும் தாமதிக்கலாம் 
Wed, 03 Mar 2021 08:26:35 +0530
கொரோனா ஜனாஸாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் தற்போது பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ள ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மேலும் தாமதம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அடுத்த இடத்தைத் தெரிவு செய்யும்வரை இருக்கின்ற ஜனாஸாக்களை எரித்துவிடுவார்களோ என்ற அச்சமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஜனாஸாக்களை மேலும் தாமதப்படுத்தாது முஸ்லிம்களின் இடங்களில் அடக்கம் செய்வதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.                           
Gossips
இம்ரான் கானுக்கு ஏன் கோட்டாபாய சாப்பாடு போடவில்லை தெரியுமா?
Mon, 01 Mar 2021 11:38:04 +0530
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வந்தபோது அவருக்கு பிரதமர் மஹிந்த மற்றும் நாமல் ஆகியோர் விருந்துபசாரம் நடத்தினர். ஆனால்,ஜனாதிபதி கோட்டாபய சாப்பாடு போடவில்லை.இது இப்போது அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்  இலங்கை வந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனியாகவும்,பிரதமர் ரணில் தனியாகவும் விருந்து வைத்தனர். அதேபோல்,சந்திரிகா காலத்தில் முஸர்ரப் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி தனியாகவும் பிரதமர் தனியாகவும் விருந்துவைத்து கௌரவப்படுத்தினர். ஆனால்,இம்ரான்கானுக்கு ஜனாதிபதி சாப்பாடு போடவில்லை.இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி இப்படி நடந்துகொண்டுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Gossips
ரணிலின் புரியாணி பார்ட்டிக்குப் போனாரா சஜித்?
Mon, 01 Mar 2021 11:08:54 +0530
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் அக்கட்சி உறுப்பினர்கள் கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தார் சஜித் பிரேமதாசா.''நீங்கள் ரணிலின் புராணி பார்டிக்குப் போகல்லையா'' என்று கேட்டார் ஏ.சி.அளவத்துக்கொட. அதற்கு பதிலளித்த சஜித் ''அவருடன் சாப்பாட்டுக்குப் போகவேண்டிய தேவை எனக்கில்லை.மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போடுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருக்கு''என்றார். அப்போது குறுக்கிட்ட நலின் பண்டார ''நீங்கள் ரணிலுடன் பேசுவதுபோல் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலாவுகிறதே'' என்று கேட்டார். அது உண்மைதானா என்று இன்னொரு தடவை உத்துப்பாருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் சஜித். 
Gossips
இம்ரான் கானின் இலங்கை விஜயம்:சுவாரசியமான சம்பவங்கள் சில....
Mon, 01 Mar 2021 10:12:23 +0530
### பெப்ரவரி 23 ஆம் திகதி பிற்பகல் 4.10 இற்குத்தான் இம்ரான்கான் இலங்கை வந்து சேர்ந்தார். ### அவர் இந்திய வான் பரப்பைத் தவிர்த்து அரேபிய கடலின் ஊடாகவே வந்தார்.இந்தியா அதன் வான் பரப்பை வழங்கியபோதும் பாதுகாப்புக் கருதி அதை அவர் தவிர்த்திருந்தார்.  ### அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்பின்போது மஹிந்த புலிகளை கொன்றொழித்தமைக்காக மஹிந்தவை புகழ்ந்து தள்ளினார் இம்ரான்.பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ### அதேவேளை,இறுதி யுத்தத்தின்போது அப்போதைய பாக்.பிரதமர் பேர்வஸ் முஷாரப் இலங்கைக்கு வழங்கிய யுத்த உதவிகளை மஹிந்த நினைவுகூர்ந்தார். ### 1996 இல் இலங்கை கிரிக்கட் அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது பாகிஸ்தான் ரசிகர்களும் இலங்கைக்கே ஆதரவு வழங்கினர் என்றார் இம்ரான். ### ஆம்,அவர்கள் இலங்கை தேசிய கொடியை ஏந்தி ஆதரவு தெரிவித்தனர் என்று சொன்னார் மஹிந்த. ### இதனைத் தொடர்ந்து இம்ரானுக்கும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 24 ஆம் திகதி இடம்பெற்றபோது,வறுமை ஒழிப்பு தொடர்பாக கோட்டா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் இம்ரான். ### அன்றைய தினம் பகல் சாப்பாட்டை சங்கிரில்லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ. ### நாமல் ராஜபக்ஸ இம்ரானை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறைக்குச் செல்லும்போது தனக்கு நன்கு பழக்கமான முகம் ஒன்று தென்பட்டது.அது அர்ஜுன ரணதுங்க. ### உடனே நின்று '' அர்ஜுன எப்படி இருக்கிறீங்க.இப்ப என்ன செய்றீங்க'' என்று விசாரித்தார் இம்ரான். ### ''நானும் அரசியலில்தான் இருக்கிறேன்.நான் எம்பி.இந்த முறை தெரிவாகவில்லை'' என்று கூறினார் அர்ஜுன. ### ''நான் உங்களிடம் அப்போது சொன்னேன் அல்லவா.புதுக் கட்சி ஒன்றை உருவாக்கி அரசியலில் இறங்கப்போகிறேன் என்று.அதனால்தான்,நான் இப்போது பிரதமராகியுள்ளேன்.நீங்களும் அப்படி கட்சி ஒன்றை உருவாக்கி இருக்கலாமே'' என்றார் இம்ரான். ### ''இல்லை.நான் அப்படிச் செய்யவில்லை.என் அப்பா அரசியலுக்காக அதிகம் தியாகம் செய்திருக்கிறார்.அவர் வழியிலேயே நான் வந்துவிட்டேன்.''-என்றார் அர்ஜுன. ### பிறகு சாப்பாடு முடிந்ததும் அர்ஜுன இம்ரான் கானிடம் போய் '' அன்று எம்முடன் விளையாடிய கிரிக்கட் வீரர்கள் உங்களைக் காண வந்துளளர்கள்.'' என்று கூறி அவர்கள் நிற்கும் இடத்தைக் காட்டினார். ### இம்ரான் கான் அவர்களைக் கண்டு பூரித்துப்போனார்.''ஓ மை கோட்.எனது நண்பர்களே'' என்று கூறிக்கொண்டு அவர்களிடம் சென்றார் இம்ரான். ### அங்கே முன்னாள் வீரர்கள்.சிதத்,ரஞ்சன்,ரோயி,அசந்த,சங்ககார,வாஸ்,முரளி உள்ளிட்டோர் நின்றனர்.அவர்களுடன் சிறிது நேரம் சிரித்துப் பேசி மகிழ்ந்தார்.அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ### அப்போது இம்ரான் அர்ஜுணவைப் பார்த்து ''விரும்பிய நேரம் என்னோடு பேசுங்கள்.எனது தொலைபேசி இலக்கத்தை இவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று அவரது உதவியாளரைக் காட்டி கூறினார் இம்ரான். ### உதவியாளர் அந்த நேரமே அர்ஜுனவுக்கு இம்ரானின் இலக்கத்தைக் கொடுத்து அர்ஜுனாவின் இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார். ### அர்ஜுனவின் சகோதரரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை மூன்று தடவைகள் சந்தித்தார் இம்ரான்.கட்டுநாயக்க விமான நிலையத்தில்,அலரிமாளிகையில்,விருந்துபசாரத்தில். ### அலறி மாளிகையில் வைத்து பிரசன்னவை இம்ரானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மஹிந்த.இவர்தான் கிரிக்கட் வீரர் ரணதுங்கவின் சகோதரர் என்றார். ### ''ஓ ..நான் பார்த்தேன்.அதே அவரது தோற்றத்தில் இருக்கிறீர்.இன்னும் ரணதுங்கக்கள் அரசியல் இருக்கிறீர்களா''? என்று கேட்டார் இம்ரான். ### ஆம் என்றார் பிரசன்ன. ### எதிர்க்கட்சியில் யார்,அரசில் யார் என்று ஆவலுடன் கேட்டார் இம்ரான்.அவரும் பதிலளித்தார். ### ''நான் அரசியலுக்கு வந்தபோது எனது கிரிக்கட் ரசிகர்கள் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. அவர்கள் வாக்குரிமை பெறும்வரை நான் பொறுமையாக இருந்தேன்.இப்போது வென்றுவிட்டேன்.தனி கட்சி ஒன்றை உருவாக்குமாறு நான் அப்போதே அர்ஜுனவிடம் கூறினேன்.'' என்றார் இம்ரான்.                    
Local News
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கவில்லை 
Mon, 01 Mar 2021 08:30:21 +0530
கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகிய அரசியல் உயர் மட்டம் அனுமதி வழங்கியுள்ளபோதிலும் சுகாதார பணிப்பாளர் அனுமதிப்பதாக இல்லை. அந்த வழிகாட்டல்,இந்தச் சுற்றறிக்கை என ஏதேதோ சொல்லி இழுத்தடிக்கிறார் அவர்.இதனால்,ஜனாஸாக்கள் சேரத் தொடங்கியுள்ளன.ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இப்போது முஸ்லிம்களிடம் மீண்டும் தொற்றிக்கொண்டுள்ளது. நல்லடக்கத்துக்கு இப்போது தடையாக இருப்பது சுகாதார பணிப்பாளர்தான் என்பதை தெளிவாகக் காட்டுகிறது இந்தக் கார்ட்டூன். இதை பிரசுரித்திருப்பது அரச ஆதரவு அருண சிங்கள பத்திரிகையாகும்.
Local News
மாகாண சபைத் தேர்தல் எப்போது? ஜனாதிபதி தலைமையில் நாளை கலந்துரையாடல்
Mon, 01 Mar 2021 07:04:26 +0530
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபாய தலைமையில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தேர்தலை இந்த மாதம் நடுப்பகுதியில் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே  தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்தார். அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கூறியிருந்தது. இதற்காக நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டி வரும் என்று ஜனாதிபதி கூறி இருந்தார். இந்த நிலையில்,இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலை நாளை நடத்துகிறார்.
Local News
முன்கூட்டியே ஓய்வு பெற்றால் 25 லட்சம் ரூபா நட்டஈடு 
Mon, 01 Mar 2021 06:25:31 +0530
அரச ஊழியர்கள் தங்கள் பணியில் இருந்து உரிய காலத்துக்கு முன் ஓய்வு பெற்றுச் சென்றால் அவர்களுக்கு நட்டஈடாக 25 லட்ச ரூபா வழங்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்த்ரகீர்த்தியினால் பெப்ரவரி 25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஏற்பாடு தனியார் மற்றும் அரை அரச ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா கூறினார். 2005 இன் விசேட ஏற்பாட்டுக்கு அமைய இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவே நட்டயீடாக வழங்கப்பட்டு வந்தது.இப்போது புதிய ஏற்பாட்டின் ஊடாக 25 லட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.  
Local News
கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்குத் தனி தீவு!
Sun, 28 Feb 2021 19:37:43 +0530
கொரோனாவால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு மக்கள் இல்லாத தீவு ஒன்றைத் தெரிவு செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிய வருகிறது. கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளபோதிலும் அவற்றை அவரவர் விரும்பிய இடங்களில் அடக்கம் செய்ய முடியாது.  நீர் மட்டம் குறைந்த-மிகவும் வரட்சியான -மக்கள் இல்லாத இடங்களில் அடக்கம் செய்ய வேண்டு என்பதே சுகாதார அமைச்சின் நிலைப்பாடாகும். அதற்கு அவர்கள் மக்கள் இல்லாத தீவு ஒன்றைத் தேடுகிறார்கள் என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Local News
தினமும் ரூ.3 கோடி பணம் புதைப்பு! அது போதைப்பொருள் விற்ற பணமாம்
Sun, 21 Feb 2021 19:46:20 +0530
போதைப் பொருள் விற்பனையால் தினமும் சம்பாதிக்கப்படும் மூன்று கோடி ரூபா பணத்தை அந்த வியாபாரிகள் மடுவில் போட்டு புதைத்து வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை பொலிஸார் ஆராய்ந்து வருவதால் அவர்கள் வங்கியில் பணம் போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவி புரிந்து வந்த வங்கி அதிகாரிகளின் கணக்குகளும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,உண்டியல் முறைமையின் ஊடாக வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பி வந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டனர் பொலிஸார். இதனால்தான் இந்த போதைப்பொருள் வியாபாரிகள் பணத்தை மடுவில் புதைத்து பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Local News
ஜனாஸா நல்லடக்கம்:பிரதமரால் முடிவெடுக்க முடியாது 
Tue, 16 Feb 2021 13:15:00 +0530
கொரோனாவால் மரணிக்கும் உடல்களை அடக்குவது பற்றி பிரதமராலோ ஜனாதிபதியாலோ தீர்மானம் எடுக்க முடியாது என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; கொரோனாவால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் அவரது கருத்தையே நாடாளுமன்றில் தெரிவித்தார்.அது தீர்மானம் அல்ல. அடக்கம் செய்வது தொடர்பான தீமானத்தை பிரதமராலோ,ஜனாதிபதியாலோ எடுக்க முடியாது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே தீர்மானிக்க வேண்டும். அவர் நிபுணர் குழுவின் சிபாரிசுகளை ஏற்று அதை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்.அதுவரை இப்போதுள்ள நடைமுறையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. 
Local News
பகல் 12 மணிக்கு பின் போதையில்  மிதக்கும் உயர் பொலிஸ் அதிகாரி
Thu, 11 Feb 2021 10:46:50 +0530
சப்ரகமுவ மாகாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தினமும் பகல் 12 மணிக்கு பிறகு அலுவலகத்திலேயே போதையில் மிதப்பதால் அவரது கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிநோக்குகின்றனராம். சில முக்கிய விசாரணைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுப்பதற்காக அவர்கள் இந்த உயரதிகாரியை பகல் 12 மணிக்குப் பிறகு தொடர்புகொண்டால் தொடர்பு கிடைப்பதில்லை என்றும் சில வேளைகளில் ஏச்சு வாங்க வேண்டியுள்ளது என்றும் தெரிய வருகிறது. இதனால் பல குற்றவாளிகள் தப்பிக்கும் சந்தர்ப்பமும் உண்டாம்.இவர் தொடர்பில் உயர்மட்டத்துக்கு முறைப்பாடுகள் செய்தபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உயர் அதிகாரியின் சகோதரர் ஒருவர் நாட்டின் பெரியவரின் பாதுகாப்புப் பிரிவில் இருப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
Gossips
கொரோனா வந்ததன் பின் அம்மாவை டிவியில்தான் பார்த்தேன்.பவித்ராவின் மகள்
Mon, 08 Feb 2021 09:46:51 +0530
இலங்கைக்குள் கொரோனா நுழைந்து ஒரு வருடமாகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தீவிரமாக ஈடுபட்டுத் திரிவதால் அவரை நேரில் காண்பது மிகவும் கஷ்டம் என்று அவரது மகள் தெரிவிக்கின்றார்.. அநேகமாக,அவரை தொலைக்காட்சியில்தான் அதிகமாக காண்பாராம் அவர்.அமைச்சர் அமைச்சில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிடும்.நாங்கள் தூங்கிவிடுவோம்.அப்போதுதான் அம்மா வருவார். நாங்கள் எழும்புவதற்கு முன் அவர் அமைச்சுக்கு சென்றுவிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.பவித்ரா இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Gossips
தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் 
Sat, 30 Jan 2021 10:11:35 +0530
எந்த வகையிலும் கொரோனா வைரஸிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கடும் உறுதியாக உள்ளாராம் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க. அவர் தனிமைப்படுத்தல் விதிகளை நூறு வீதம் பேணி கொரோனா வைரஸிற்கு தண்ணி காட்டி வருகிறார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கின்றது. இரண்டு தடவைகள் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகிறார் அவர். நுவரெலியா,அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் அவருடன் பழகிய சி.பி.உடனே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அடுத்து அமைச்சர்கள் பவித்ராவுக்கும் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா தொற்றியது.அவர்களுடனும் இவர் பழகி இருந்தார்.இதனால் இரண்டாவது தடவையாகவும் தன்மைப்படுத்தலுக்கு உள்ளானார். இவ்வாறு வீழ்ந்து வீழ்ந்து நூறு வீதம் தனிமைப்படுத்தல் விதிமுறையை பின்பற்றி வருகிறார் சி.பி.இதனால் தனிமைப்படுத்தல் விருதுக்கு தகுதியுடையவர் இந்த அமைச்சர் என்கிறார்கள் அவரது அரசியல் நண்பர்கள்.
Local News
சாம்பல் விற்பனையில் அரசுக்கு ரூ.145 கோடி இலாபம்!
Sun, 24 Jan 2021 08:49:26 +0530
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து கழிவாக வெளியேறும் சாம்பலை விற்று அரசு இரண்டு வருடங்களில் 145 கோடி ரூபாவை இலாபமாகப் பெற்றுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சாம்பல் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு இதைக் கொள்வனவு செய்கின்றன என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 139 மெட்ரிக் தொன் சாம்பல் கிடைத்தது. அதில் 3 லட்சத்து 6ஆயிரத்து 143 மெட்ரிக் தொன் விற்பனை செய்யப்பட்டது.அது 71 கோடி 72 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.  2019 இல் 27 லட்சத்து 9 ஆயிரத்து 694 மெட்ரிக் தொன் சாம்பல் கிடைத்தது.அதில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 93 மெட்ரிக் தொன் விற்பனை செய்யப்பட்டது.73 கோடி 65 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
Crime Story
தலையைப் புதைத்திருக்கலாம் 
Tue, 09 Mar 2021 11:05:46 +0530
சப் இன்ஸ்பெக்டரால் கொல்லப்பட்டு வெட்டியெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை அவர் எங்கயாவது  புதைத்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றவாளி அவரது வீட்டுக்கு அருகில் பல பொருட்களை எரித்திருந்தார்.அதைப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.ஆனால்,தலையை மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை,அதை அவர் எங்காவது புதைத்திருக்கலாம் என்று நாம் சந்தேகிக்கிறோம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இருந்தும்,தலையைத் தேடும் முயற்சியை பொலிஸார் இன்னும் கைவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us