Local News
அரிசி விலை 200 ரூபா:மக்கள் மேலும் துன்பத்தில்...
Mon, 10 Jan 2022 08:50:34 +0530
அரிசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கும் என்று அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. ஒரு கிலோ நெல்லின் விலை 100 ரூபாவைக் கடந்துள்ளது என்றும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 170 ரூபாவை விட அதிகமாக செலவாகிறது என்றும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒரு கிலோ அரிசியின் சில்லறை விலை 185 ரூபாவைத் தாண்டி 200 ரூபா வரை அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை,அரிசி விலை அதிகரிப்பானது பாரிய மில் உரிமையாளர்கள் மேற்கொள்ளும் கொள்ளை நடவடிக்கையாகும் என்று அகில இலங்கை அரிசி ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் காரணமாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நினைத்தவாறு விலையை உயர்த்துகின்றனர் என்றும் அரசே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர்கள் கூவுகின்றனர்.
Local News
திறமையற்ற அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் 
Sun, 26 Dec 2021 12:15:07 +0530
நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வைப் பெற வேண்டும் என்றால் திறமையற்ற அமைச்சர்களையும் பிழையாக அறிவுரைகள் வழங்கும் ஆலோசகர்களையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக கூறியுள்ளார். கேஸ் வெடிப்பு பிரச்சினைக்கு எவரும் பொறுப்பேற்காமை பாரிய பிரச்சினையாகும் என்று அவர் மேலும் கூறினார். உரப் பிரச்சினைக்குக் காரணம் பிழையான ஆலோசனைகளே என்று கூறிய அவர் செயலாளர்களை பதவி நீக்குவதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட இயலாது என்று அவர் சொன்னார்.
Local News
மக்கள் இங்கு துன்பம்: 80 எம்பிக்கள் வெளிநாடுகளில் இன்பம் 
Sun, 26 Dec 2021 11:08:21 +0530
இலங்கையில் தலைதூக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் எதிர்க்கட்சி மற்றும் அரச எம்பிக்கள்-அமைச்சர்கள் என 80 பேர் உல்லாசம் அனுபவிப்பதற்காக ஜனவரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்கின்றனர். ஜனவரி 18 இல் நாடாளுமன்றம் கூடுவதால் இந்த எம்பிக்களுக்கு இது மேலும் வசதியாகிப்போய்விட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கே இவர்கள் சுற்றுலா செல்கின்றனர். பொருளாதார பிரச்சினையால் மக்கள் இங்கு துன்பப்படும் நிலையில் எம்பிக்கள்-அமைச்சர்கள் இவ்வாறு உல்லாசம் அனுபவிப்பது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று அறிய முடிகிறது.
Local News
அமைச்சுப் பதவிகளைத் துறந்து எம்முடன் இணையுங்கள்: விமல்-கம்மன்பில-வாசுவுக்கு அழைப்பு 
Thu, 23 Dec 2021 09:08:17 +0530
அமைச்சுப் பதவிகளை வகித்துக்கொண்டு அரசை விமர்சிக்காமல் அந்தப் பதவிகளைத் துறந்துவிட்டு  எம்முடன் இணையுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுக்கிறது. இது தொடர்பில் அக்கட்சியின் எம்பி ஹர்சன ராஜகருணா கூறுகையில்; நாளை ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்.நாம் காட்டாயம் வெல்வோம்.மக்களுக்கு வெறுத்துவிட்டது இந்த அரசு.கோட்டாவுக்கு வாக்களித்த 69 லட்சம் பேரில் 60 லட்சம் பேர் கோட்டாவுக்கு எதிராக இருக்கின்றனர். முதலில் எந்தத் தேர்தல் வந்தாலும் வெல்வோம்.ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் சஜித் பிரேமதாஸாதான்.வேறு கட்சியில் ஒருவரை ஜனாதிபதியாக்கி ஆட்சி நடத்த நாம் விரும்பவில்லை.கடந்த கால அனுபவம் எங்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. விமல் வீரவன்ச,வாசுதேவ,கம்மன்பில  போன்றவர்கள் அரசுக்கு எதிராக வெளியில் வந்து பேசுகிறார்கள்.அமைச்சரவைக்குள் இருந்து பேச வேண்டியதை வெளியில் வந்து பேசுகிறார்கள்.இது பொருத்தமற்ற எதிர்ப்பு. உண்மையில் இவர்கள் அரசின் செயற்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றால் அமைச்சுப் பதவிகளைத் துறந்து எம்முடன் இணையுங்கள் என்றார்.
Local News
ஒரே நாடு ஒரே சட்டம் வேலைத்திட்டத்தை உடன் நிறுத்துக...
Sun, 19 Dec 2021 19:29:54 +0530
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களை ஏமாற்றும் இனங்களிடையே இனவாதத்தைத் தூண்டும் செயல்.இதை உடனே நிறுத்த .வேண்டும் என்று வேலுகுமார் எம்பி கூறினார்.இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்.பிக்குகளைக்கூட மதிக்காதவர். இப்படியான ஒருவரைத் தலைவராக நியமித்தால் சரி வருமா?இதுவொரு நகைச்சுவை நாடகம்.அரசில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும். அரசு பழைய முறைமையில் சென்று ஆட்சியை மீண்டும் பிடிக்க-இருக்கின்ற ஆட்சியை பலப்படுத்த இவ்வாறான வேலைகளை செய்கிறது. தொடர்ச்சியாக மதவாதத்தைக் கிளப்புவதும் தொடர்ச்சியாக இனவாதத்தைக் கிளப்புவதும் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் என்றே இவர்களின் அரசியல் அமைந்துள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களை ஏமாற்றும்-இனங்களிடையே இனவாதத்தைத் தூண்டும் செயல்.இதை உடனே நிறுத்த .வேண்டும் இனி இவர்களின் நாடகம் எடுபடாது.மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள்.என்றார்.
Local News
போதைப் பொருள் பாவனை உச்சம்; அதற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் 
Sun, 19 Dec 2021 10:51:35 +0530
நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அதற்கு அடிமையாகியுள்ள அதிகமான பெண்கள் பாலியல் தொழில் செய்து போதைப்பொருள் பாவனைக்கான பணத்தைத் தேடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 1 லட்சத்து 26 பேர் நாடு பூராகவும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுள் பாடசாலை மாணவர்கள்தான் அதிகம்.சிறை செல்பவர்களுள் அதிகமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களே. அதிலும் அதிகமான பாவனையார்கள் பெண்கள்தான்.அவர்களுள் 50 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்காகத் தேவைப்படும் பணத்தை பாலியல் தொழில்மூலம் பெறுகிறார்கள். மேலும் சில பெண்கள் சிறு கைத்தொழில் மூலமாகவும் போதைப்பொருள் விற்பனை மூமாகவும் போதைப்பொருள் பாவனைக்குத் தேவையான பணத்தை பெறுகின்றனர். தினமும் புதிதாக 8 பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர் என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.
Crime Story
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 
Wed, 29 Sep 2021 08:58:48 +0530
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன். கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us