Local News
முடக்கம் நீக்கமாக? அல்லது நீடிப்பா? இன்று தீர்மானம்
Fri, 10 Sep 2021 08:32:31 +0530
தற்போது நடைமுறையில் இருக்கும் நாட்டின் முடக்கத்தை நீக்குவதா இல்லை மேலும் நீடிப்பதா என்று இன்று தீர்மானிக்கப்படும். ஜனாதிபதியின் தலைமையில் இது தொடர்பான கூட்டம் இன்றுக் காலை இடம்பெறவுள்ளது.அக்கூட்டத்தில் இதுவரையான முடக்கத்தின் பலாபலன்கள்பற்றி ஆராயப்படும்.அதன் அடிப்படையிலேயே நாட்டை மேலும் முடக்குவதா இல்லை நீக்குவதா என்ற முடிவு எட்டப்படும். 13 ஆம்திகதி நாடு திறக்கப்பட வேண்டும்.முடக்கம் காரணமாக தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. தினசரி தொற்று ஆயிரத்துக்கு வந்தால் மாத்திரமே முடக்கத்தை நீக்க வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
Local News
தானாக முடங்கியுள்ள 15 நகரங்கள்:வர்த்தக சங்கம் தீர்மானம்
Tue, 17 Aug 2021 10:00:37 +0530
கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் அரசின் தீர்மானத்தை எதிர்பார்க்காது நாட்டில் சில நகரங்கள் தாமாக முன்வந்து முடங்கியுள்ளன. அவ்வாறு 15 வர்த்தக நகரங்கள் அந்ததந்த வர்த்தக சங்கங்களின் தீர்மானத்துக்கு அமைய முடக்கப்பட்டுள்ளன.இந்த முடக்கம் ஒரு வாரத்துக்கு நீடிக்கும். கம்பஹா,ஹம்பாந்தோட்டை,வேயாங்கொட,அம்பலங்கொட,தங்கொட்டுவ,சேருநுவர,பலாபத்வள,பண்டாரவளை,பலாங்கொட ,உள்பத,மருகாகமுள்ள,பதுளை,எம்பிலிபிட்டிய,திருமலை மற்றும் கெக்கிராவை ஆகிய நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இவற்றுள் சில நகரங்கள் நேற்று முதலும் சில நகரங்கள் நேற்று முன்தினம் முதலும் மூடப்பட்டுள்ளன.
Local News
கொரோனா தடுப்பூசி உடனே பயன் தருமா?
Tue, 17 Aug 2021 09:03:07 +0530
கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட உடனேயே அதற்கான பயன் கிடைக்காது.சரியாக ஒன்றரை மாதங்களின் பின்பே அதன் கிடைக்கும்.அப்போதுதான் அது செயற்பட த் தொடங்கும் என்று வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிடையில் எடுக்கின்ற சரியான தீர்மானமே கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மக்களும் இதை புரிந்துகொண்டு சுகாதார நடைமுறையை நூறு வீதம் பின்பற்ற வேண்டும்.அரசும் இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எல்லோரும் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
Local News
அதிகரிக்கும் சிறுவர் கொரோனா தொற்றாளர்கள்:பெற்றோர்களே கவனம்!
Tue, 17 Aug 2021 07:58:46 +0530
பொரல்லை ரிஜ்வெ சிறுவர் வைத்தியசாலையில் கொரோனவுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 150 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாளாந்தம் 20 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அங்கு அனுமதிக்கப்பட்டு  வருகின்றனர் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையின் இரண்டு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டு சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால்,அங்கும் இப்போது இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஆகவே,சிறுவர்கள் விடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
World News
காஸா மீதான கட்டுப்பாடு:தளர்த்துகிறது இஸ்ரேல்:இன்று முதல் நடைமுறை 
Fri, 25 Jun 2021 10:52:25 +0530
இஸ்ரேலின் புதிய அரசு உதயமானதைத் தொடர்ந்து இஸ்ரேல் இதுவரை விதித்திருந்த காஸா மீதான சில தடைகளை நீக்குகிறது. அதில் முக்கியமாக மீன் பிடி மற்றும் தொழில்சாலைகளுக்கான மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் அடங்குகிறது. காஸாவில் இருந்து மீன் பிடிக்கும் கடல் எல்லை இன்று முதல் 6 கடல் மைலில் இருந்து 9 கடல் மைல் வரை விஸ்தரிக்கப்படுகிறது. அதேபோல்,தொழில்சாலைகளுக்கான மூலப்பொருட்களை வெளியிடங்களில் இருந்து கரீம் சலோம் என்ற இஸ்ரேல்-காஸா எல்லையின் ஊடாக காஸாவுக்குள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தேவையான மூலப்பொருட்களை இஸ்ரேலில் இருந்தே கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுறது.
Local News
காலை விற்று உரப் பிரச்சினைக்குத் தீர்வு 
Fri, 25 Jun 2021 07:43:15 +0530
நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினைக்கு உடன் தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி ஊனமுற்ற பட்டைச்சிப்பாய் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரது பிளாஸ்டிக் காலை கழட்டி அதை விற்றாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். ஹசலக பெற்றோர் நிலையத்துக்கு அருகில் அவரது பிளாஸ்டிக் காலை கழட்டி காட்சிக்கு வைத்துள்ளதோடு மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கையை பதாகையை எழுதி காலுக்கு அருகில் தொங்கவிட்டுள்ளார். அதனையே படத்தில் காண்கிறீர்கள்.அந்தக் காலின் விலை 75 ஆயிரம் ரூபா என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
Local News
சாராய விற்பனைத் தடை: தினமும் ரூ.60 கோடி நட்டம் 
Thu, 24 Jun 2021 20:36:29 +0530
தொடரும் பயணத் தடை காரணமான சாராயக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு தினமும் 60 கோடி ரூபா நாட்டம் ஏற்பட்டு வருகிறது என்று ஹலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜெ.குணசிறி கூறுகையில்;பயணத் தடை காரணமாக அணைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.இதனால் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. சிலர் வீடுகளில் சாராயத்தை காய்ச்சு பருகும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.உள்ளூர் மதுபான வகைகள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றமையையும் அறிவோம். 1600 ரூபாவாக விற்கப்படும் 750 மில்லி லீற்றர் அதி விசேஷ மதுபானம் கருப்புச் சந்தையில் 5 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுகிறது.அதன் கறுப்புச் சந்தை விலை 2500 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. இந்தப் பயணத் தடை காரணமாக அரசுக்கு தினமும் 60 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டு வருகிறது.-என்றார்.
Gossips
எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி: நிறுத்தி வைக்கப்பட்டது இப்படித்தான் 
Sun, 30 May 2021 08:05:12 +0530
கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் பின்வரிசை எம்பிக்களுடன் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ. அப்போது அவர்களுடன் பேசப்பட்ட விடயங்களுள் எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி முக்கியமான விடயமாகும். எம்பிக்கள் அனைவருக்கும் குறிப்பாக,புதிய எம்பிக்களுக்கு வாகனங்கள் தேவைதான்.என்றாலும்,இப்போதைய நிலைமையில்,வாகனங்களை இறக்குமதி செய்வது சரி இல்லை.கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய இந்த சூழலில் வாகனங்களை இறக்குமதி செய்வது எமது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று அந்த எம்பிக்கள் கூறினர். மஹிந்தவும் அதை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை கூட்டத்துக்குச் சென்றார்.அங்கு இந்த விடயத்தைக் கூறினார். ''இதை தற்போதைக்கு நிறுத்தி வைப்போம்.கொரோனா நிலைமை சரி வந்ததும் தொடங்குவோம்'' என்று மஹிந்த அமைச்சரவையில் கூறினார். இதை முழுமையாக ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உறுப்பினர்கள் இதை நிறுத்தி வைப்பதற்காக முழு அனுமதியை வழங்கினர். எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.  
Crime Story
றிஸாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமி மரணம் 
Fri, 16 Jul 2021 11:01:00 +0530
றிசாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவர் காயமுற்ற நிலையில் இந்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.நேற்று அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று மரண விசாரணை இடம்பெற்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us