Home / Sub Lead News
Sub Lead News
டிசம்பரில் 30 ஆயிரம் மரணங்கள்
Tue, 17 Aug 2021 08:36:20 +0530
நாடு உடனடியாக முடக்கப்படாவிட்டால் டிசம்பர் மாதமளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். வைரஸின் தாக்கத்தை புரிந்துகொள்வதற்கு நிர்வாகிகளுக்கு காலம் எடுக்கிறது என்று கூறியுள்ள அரச வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்ம குணரத்ன இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு வைத்தியர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இன்று ,நாளை இதைக் கட்டுப்படுத்திவிட முடியாது.நூறு வீதம் சுகாதார நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.இதை  எழுத்துமூலம் அரசுக்கு அறிவித்துள்ளோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
எரிபொருட்களின் விலை: உலகிலேயே இலங்கையில்தான் மிகக் குறைவாம் 
Fri, 16 Jul 2021 10:40:22 +0530
உலகிலேயே எரிபொருட்களின் விலை மிகக் குறைவு இலங்கையில்தான் என்று அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த உண்மையை மறைத்து எரிபொருட்களின் விலையை நாம் அதிகரித்துள்ளோம் என்று எதிர்க்கட்சியினர் நாடு பூராகவும் சொல்லித் திரிகின்றனர். எரிபொருள் விலையேற்றத்துக்காக எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையைக் கொண்டு வருகின்றனர்.நான் அதை எதிர்கொள்வேன். கடந்த ஆட்சிக்கு எதிராக அதிகமான நம்பிக்கை இல்லா பிரேரணைகளைத் தயாரித்தவன் நானே.அதற்காகத்தான் இப்போது எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையைக் கொண்டு வருகின்றனர்.என்றார்.
யாலவில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை
Fri, 16 Jul 2021 09:47:27 +0530
யாலவில் 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வெளி ஆட்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை அரசு உடன் கைவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விதித்துள்ளார். இல்லாவிட்டால் இதற்கு எதிராக நாம் மக்களுடன் வீதிக்கு இறங்கிப் போராடுவோம் என்று கூறினார். சுற்றுலா துறை சாரதிகள் சங்கத்துடன் அவர் அவரது அலுவலகத்தில் வைத்து நடத்திய சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். ''யால என்பது சர்வதேச சுற்றுலாவாசிகளை கவர்ந்த ஓர் இடம்.இலங்கையின் மிக முக்கியமான வளங்களில் ஒன்று.இதில் கை வைத்தால் அங்குள்ள விலங்குகள் அழிவதோடு ஏனைய வளங்களும் அழியும்.ஆகவே,அரசு இந்தத் திட்டத்தை உடன் கைவிட வேண்டும் ''-என்று அங்கு அவர் மேலும் கூறினார்.
எங்களிடம் கேட்காமல் செய்யக்கூடாது 
Fri, 09 Jul 2021 08:48:09 +0530
முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை திருத்துதல் உள்ளிட்ட முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை செய்யும்போது முஸ்லிம் எம்பிக்களின் ஆலோசனைகள் கட்டாயம் பெறப்பட வேண்டும் என்று எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார். அவர் அங்கு மேலு கூறுகையில், முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை திருத்துவது தொடர்பில் நாம் நீதி அமைச்சரை சந்தித்து பேசினோம்.முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான எமது விருப்பத்துக்கு மாறாக அரசு எதையும் செய்யக்கூடாது.எமது ஆலோசனைகளை பெற்று அதற்கு அமையவே செயற்பட வேண்டும். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறுபான்மை இன மக்களின் அடிப்படை உரிமைகளையும் மத சுதந்திரத்தையும் மீறி வருகின்றமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இலங்கைக்கு ஜீ எஸ் பி பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்.
பசில் வந்து எதையும் பிடுங்க முடியாது 
Sat, 03 Jul 2021 09:53:21 +0530
பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதன்மூலம் இந்த நாட்டுக்கு எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.அவர் வந்தால் அதைச் செய்வார்.இதைச் செய்வார் என்று பிரசாரம் செய்யப்படுகிறது.இது அவரை பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும் என்று திஸ்ஸ அத்தநாயக்க எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துக் கூறுகையில்;2005 இல் இருந்து பசில் மஹிந்த அரசில் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். அப்போது அவரால் எதையும் செய்ய முடியவில்லை.இப்போது மட்டும் எதைச் சாதிக்கப்போகிறார்.மக்களின் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக நடப்படும் நாடகம்தான் இது. பசிலை அரசிலில் பிரபல்யப்படுத்துவதற்காக ஒருவகையான நாடகம் நடத்தப்படுகிறது.பசில் வந்தால்த்தான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு முன்வைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.உண்மையில் அவரால் எதையும் பிடுங்க இயலாது.என்றார்.
அரசில் இருந்து விலகுங்கள்: சு.க.வுக்கு மக்கள் அழுத்தம்
Sat, 03 Jul 2021 09:22:14 +0530
அரசில் இருந்து விலகி சுதந்திர கட்சியை பலப்படுத்துமாறு அக்கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திர கட்சிக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என்று அறிய முடிகிறது. சு.க அமைப்பாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாவட்டத் தலைவர்கள் என கட்சியின் எல்லா மட்டங்களிலும் பதவிகளை வகிப்பவர்கள் ,உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் ஒருமித்த குரலில் இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். சு.க அரசுடன் இணைந்து இருக்கின்றபோதிலும் பொதுஜன பிரமுன அமைச்சர்கள் தங்களை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைக்கின்றனர். எமது ஆதரவை பெற்றுக்கொண்டு எம்மை ஓரங்கட்டும் அரசில் இருக்க வேண்டிய தேவை இல்லை.அதை விட மேலானது அரசில் இருந்து விலகி கிராம மட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புவது என்று அவர்கள் கூறுகின்றனர். 
புர்கா அரேபிய கலாசாரம்:அதைக் கைவிடுங்கள் 
Wed, 26 May 2021 08:26:55 +0530
புர்கா என்பது அரேபிய கலாசாரம் என்று தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி முஸ்லிம்கள் சிந்தித்து பார்த்து இதை அணிவதை நிறுத்த வேண்டும் என்றார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; எமது அரசு புர்காவைத் தடை செய்யவில்லை.கடந்த அரசின் பரிந்துரையையே எமது அரசு நடைமுறைப்படுத்துகிறது. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களில் இருந்து பிரிவதற்கு புர்காவே காரணம் என்று கடந்த அரசே கூறியது. புர்காவை நான் எதிர்க்கிறேன்.10 வருடங்களாக இதை சொல்லி வருகிறேன்.இது அரேபிய கலாசாரம்.எமக்குத் தேவை இல்லை. இதைத் தடை செய்வதற்கு அப்பால் நாமே இதை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
ரஞ்ஜனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு 
Thu, 29 Apr 2021 05:28:44 +0530
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா முன்வைத்துள்ளார். அதற்கமைய விரைவில் அவருக்கு பொது மன்னிப்புக் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அவர் நேற்று அங்குனுகொலபெலச சிறைக்குச் சென்று ரஞ்சனை சந்தித்து நலம் விசாரித்தார்.அதன்பின்பே மேற்படித் தகவலைத் தெரிவித்தார்.  மேற்படி விடயத்தை அவர் ரஞ்சனிடமும் தெரிவித்ததாக அத்தநாயக்க கூறினார்.அவர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது நியாயமானது என்று அத்தநாயக்க மேலும் கூறினார்.
பங்காளி கட்சிகளுடன் பிரச்சினை! தீர்த்து வைக்கும் நடவடிக்கையில் பிரதமர் 
Fri, 16 Apr 2021 08:01:31 +0530
அரசில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுடன் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கின்றது. 19 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெறப்போகும் கூட்டத்தில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மே தினக்கூட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய பல விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் நல்ல முடிவு ஒன்று எட்டப்படும் என்று மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றது. குறிப்பாக,விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகளே அண்மைக்காலமாக அரசுடன் முரண்பட்டுக்கொண்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.      
புத்தர் சிலையை உடைத்த இந்தியர் திடீர் மரணம் 
Tue, 06 Apr 2021 10:10:43 +0530
குருநாகல்,குளியாபிட்டியவில் புத்தர் சிலையை உடைத்த சந்தேகத்தின் பேரில் வாரியபோல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனமே மரணத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு அவருக்கு திடீர் சுகாச பிரச்சினை ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து வாரியப்போல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் அவ்வாறு சேர்க்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இவரின் உடல் PCR சோதனைக்காகா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலில் வெல்வதற்காகவே  புர்கா-மதரஸா தடை 
Sun, 14 Mar 2021 08:41:08 +0530
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகி வருகிறது அரசு.நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றியை அடைந்ததுபோல் இந்தத் தேர்தலிலும் அபார வெற்றியை அடைய முடியுமா என்பது சந்தேகமே. அதனால்தான்,முஸ்லிம் விரோத செயற்பாடுகள் சிலவற்றை முன்னெடுத்து அவற்றின் ஊடாக அரசு வெற்றி பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளது என்று அறிய முடிகிறது. நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் புர்கா தடையை நிறைவேற்றுவதன் மூலமும் மத்ரஸாக்கள் சிலவற்றைத் தடை செய்வதன்மூலமும் மாகாண சபைத் தேர்தலில் அபார வெற்றியை அடைய முடியும் என்று அரசு நம்புகிறது. இதன் காரணமாகவே,மேற்படி விடயங்களில் கை வைப்பதற்கு அரசு களமிறங்கியுள்ளது என்று அறிய முடிகிறது.
Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us