பெண்ணின் தலையைத் துண்டித்த சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
Wed, 03 Mar 2021 09:49:47 +0530
கொழும்பு – டாம் வீதி,ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அதன் பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரை கைதுசெய்ய சென்ற போது, அவர் நேற்று தனது வீட்டிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் இன்று காலை மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது அருகில் விஷ போத்தல் ஒன்றும் இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 52 வயதான குறித்த நபர், புத்தல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரென கண்டறியப்பட்டுள்ளது.