16 ஆவது ஆண்டாக நோன்பு நோற்கும் திருமாவளவன்...
Fri, 16 Apr 2021 14:35:36 +0530
ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் நோன்பு நோற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இம்முறையும் 5 நாட்கள் நோன்பு நோற்கின்றார்.
கடந்த ஆண்டு அவர் 2 நாட்கள் மட்டுமே நோன்பு வைத்த நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் நோன்பு நோற்கின்றார்.
இத்தோடு சேர்த்து அவர் 16 ஆவாது ஆண்டாக நோன்பு நோற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையிலேயே திருமாவளவன் நோன்பு நோற்று வருகிறார்.
நோன்பு நோற்கும் நாட்களில் திருமாவளவன் சென்னையில் இருந்தார் என்றால் சஹர், இஃப்தார் நிகழ்ச்சிகள் களை கட்டும்.
சாம்கோ, அபுபேலஸ் போன்ற உணவகங்களில் திருமாவளவனோடு சேர்ந்து சஹர் உணவு சாப்பிடுவதற்காக ஒரு பெரிய படையே குவியும்.அதேபோல் தன்னுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் திருமா அழைத்து இஃப்தார் விருந்து அளிப்பார்.
இந்நிலையில் இந்தாண்டு கொரோனா வைரஸ் 2ஆவது அலை பரவல் காரணமாக, ஹோட்டல்களுக்கு செல்வதை தவிர்த்து சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் மட்டுமே சஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் திருமா.